Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் தெரியாம கூட செஞ்சிடாதீங்க.. | Don't Do This on Friday

Nandhinipriya Ganeshan Updated:
வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் தெரியாம கூட செஞ்சிடாதீங்க.. | Don't Do This on FridayRepresentative Image.

இந்து சாஸ்திரங்களின் படி, வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் வாரத்தில் மற்ற நாட்களில் வீடு எப்படி இருந்தாலும் கூட, வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்து வீடு முழுக்க ஊதுவர்த்தி வாசனை மணக்க, கடவுள் படங்களுக்கு பூஜை செய்து விளக்கேற்றி வழிபடும் வழக்கத்தை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். இத்தகைய மங்களகரமான நாளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் செய்வதன் மூலமாக குடும்பத்தில் பண கஷ்டம் வரும். அது நடக்கக்கூடாது என்று நினைத்தால் வெள்ளிக்கிழமைகளில் இந்த காரியங்களை தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள்.

வெள்ளிக்கிழமைகளில் செய்யக் கூடாதவை:

➥ வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே, அந்த நாளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

➥ வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண்கள் அழக்கூடாது. ஏனென்றால் வெள்ளிக்கிழமை நாளில் அழுவதால் வீட்டில் பணம் தங்காதாம். அன்றையதினம் வீட்டில் அழுகை சத்தம் கேட்பது குடும்பத்திற்கும் உகந்தது அல்ல. 

➥ பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை இரவில் கடன் வாங்குவதையும், கடன்கொடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

➥ விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. அதேபோல் நகம், முடி வெட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

➥ வெள்ளிக்கிழமையன்று மருந்து மாத்திரை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருந்து மாத்திரைகளை முந்தைய தினமே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

➥ வெள்ளிக்கிழமையன்று மறந்தும் துணி துவைக்கக் கூடாது. அதேபோல், அன்றைய தினம் எந்த பொருளையும் சுத்தம் செய்யக் கூடாது. மேலும், அரிசி வறுப்பது, புடைப்பது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

➥ வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்காமல் இருக்க கூடாது. அதேபோல், வெள்ளிக்கிழமையில் வீட்டை கழுவவோ, துடைக்கவோ கூடாது.

➥ மாலை நேரத்தில் தீபம் ஏற்றிய பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. அப்படி செய்தால் கடன் சுமை பெருகும். 

➥ காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது. அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்ய கூடாது. 

➥ வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தாலோ, முடிவெட்டி, சவரம் செய்தாலோ கடன் பிரச்சனை வருமாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்