Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேண்டியதை கொடுக்கும் 'பண்ணாரி அம்மன்' கோவிலின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்று கதை..

Nandhinipriya Ganeshan September 16, 2022 & 15:30 [IST]
வேண்டியதை கொடுக்கும் 'பண்ணாரி அம்மன்' கோவிலின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்று கதை..Representative Image.

ஈரோடு மாவட்டம் என்று சொன்னாலே ஒன்று பெரிய மாரியம்மன், மற்றொன்று சத்தியமங்கலத்தில் உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில்கள் தான் நினைவுக்கு வரும். சமயப்புரத்து மாரியம்மன், மேச்சேரி பத்ரகாளியம்மன் போன்ற பெரிய கோயில்களை போலவே ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலும் (Erode Periya Mariamman Kovil), சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலும் (Sathyamangalam Bannari Amman Temple) மிகவும் பிரசித்தி பெற்றவை. 

பண்ணாரி அம்மன் ஆலயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இது தமிழகம் மற்றும் கர்நாட எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் பிரியமான தெய்வமாக திகழ்கிறாள் இந்த பண்ணாரி தாய். 

வரலாறு: 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த சுற்றுவடார மக்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருகை தருவது வழக்கம். அந்த மாடுகளுக்கு மத்தியில் ஒரு கரவை மாடு மட்டும் தன் கன்றுக்கு பால் தராமலும், மற்றவர்களை பால் கறக்கவிடாமலும் தடுத்து கொண்டிருந்தது. மேய்ச்சலின் போதும் தனியாக சென்று வந்துள்ளது. இப்படியே பல நாட்கள் தொடர்ந்து வந்துள்ளது. ஒருநாள் மேய்ப்பான் அந்த பசுவின் போக்கை கவனித்து பசுவை பின்தொடர்ந்து செல்கிறான். அப்படி தொடர்ந்து பார்க்கையில் சற்று தொலைவில் இருந்த கணாங்கு புற்கள் நிறைந்திருந்த வேங்கை மரத்துக்கு அருகில் சென்று ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அந்த படு தானாக பால் சுரந்து கொண்டிருந்தது.

இந்த அதிசயத்தை பார்த்த சிறுவன் உடனே சென்று ஊர் மக்களில் நடந்ததை சொல்கிறான். ஊரே கூடிவந்து அந்த அதிசயத்தை வேடிக்கை பார்த்தது. பின்னர், சிலர் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்துள்ளனர். அங்கே ஒரு சின்ன புற்றும், அதன் அருகில் ஒரு சுயம்புத் திருவுருவமும் காட்சித்தர, அதை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். 

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு அருள் வந்து, "கேரளாவிலிருந்து மைசூர் பட்டணத்துக்குப் பொதி மாடுகளை ஓட்டிச்சென்ற மக்களுக்கு வழித்துணையாக நான் வந்தேன், எழில் மிகுந்த இவ்விடம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இவ்வனப்பகுதியை விட்டு செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கிவிட்டேன். இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயில் கட்டி நீங்கள் வழிபட்டால், நான் பண்ணாரி அம்மனாக உங்களை காத்தருள்வேன்" என்று வாக்கு கூறினார். 

ஊர் மக்கள் செய்வதிரியாமல் திகைத்துப்போனார்கள். உடனடியாக, அந்த இடத்திலேயே கணாங்குப் புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து வழிபட்டு வந்தனர். பண்ணாரி தாயின் அருளும், மகிமையும் எட்டுத்திக்கும் பரவத்தொடங்கி இப்போது பிரசித்த் பெற்ற கோவிலாக விளங்குகிறது. 

கோயில் சிறப்பு:

இங்கு மூலவராக அன்னை பண்ணாரி அமைந்துள்ளாள், தல விருட்சமாக வேங்கை மரமும், தீர்த்தமாக தெப்பக்கிணறும் அமைந்துள்ளது. ஆலயத்துக்குள் நுழைந்ததும் சந்தான விநாயகரின் சன்னதியை தரிசனம் செய்த பின்னரே அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். தேடி வந்து தன்னை வழிபடும் மக்களுக்கு அவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடந்தேற வரம் வாரி வழங்கும் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் தெற்கு திசையை நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சித் தருகிறாள். இங்கு விபூதி கிடையாது, அதற்குபதிலாக புற்று மண் தான் விபூதியாக வழங்கப்படுகிறது. 

இந்த கோவியிலில் கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம் கிடைக்க, தொழில் செழிக்க, திருமணம் பாக்கியம், வேலை கிடைக்க என்று அனைத்து பிராத்தனைகளும் நிறைவேறுகின்றது. 

குண்டம் பெருந்திருவிழா:

ஆண்டுதோறும் பங்குனி மாதம் கோவிலில் குண்டம் விழா வெகு விமரிசையாக் நடக்கும். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் மட்டுமின்றி கர்நாடகா பக்தர்களும் தீ மிதிப்பார்கள். இதற்காக பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே இங்கு வந்து தங்கி இருந்து தீ மிதிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், ஏராளமான கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

நடை திறப்பு நேரம்: 

காலை 06.00 முதல் 12.00 மணி வரை

மாலை 04.00 முதல் இரவு 09.00 மணி வரை

தொலைபேசி எண்: 04295 243 289


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்