Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புரட்டாசி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

Nandhinipriya Ganeshan September 16, 2022 & 10:45 [IST]
புரட்டாசி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..Representative Image.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடங்கவுள்ளது. இதையொட்டி, கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. 

இந்த சிறப்பு பூஜை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும். அந்தவகையில், 5 நாட்களும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூசை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணி அளவில் நடை அடைப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, இரவு 8.30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும், தினமும் உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 

மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், 17 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு 21 ஆம் தேதி இரவு10 மணிக்கு நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்