Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aadi 18 Reasons : ஆடிப்பெருக்கு விழா கொண்டாட இப்படி ஒரு காரணமா….!

Manoj Krishnamoorthi August 02, 2022 & 11:00 [IST]
Aadi 18 Reasons : ஆடிப்பெருக்கு விழா கொண்டாட இப்படி ஒரு காரணமா….!Representative Image.

இயற்கையே இறைவன் இயற்கையே நம்மை வாழ வைக்கும் காரணி என்ற உண்மை உணர்ந்த முற்போக்குவாதியே நம் முப்பாட்டன் ஆதி தமிழன் ஆவான். அவன் வழியில் உதித்த நாம் நம்மை வாழவைக்கும் இயற்கையை மதிக்க அவன் உருவாக்கி முறைகளுள் ஒன்று வழிபாடு முறையாகும். அதன் வழியில் தோன்றிய தமிழ் மாதங்களில் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் விஞ்ஞான காரணம் முக்கியமானதாகும்.  

இந்த ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் நம் பாரம்பரியத்தில் முக்கியமான பண்டிகை ஆகும். உங்களுக்கு  ஆடி 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு தினத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியுமா...? இயற்கையை நேசித்த தமிழன் நிச்சியம் அதை சார்ந்த விஷேசங்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பானா.... சரி, வாருங்கள் நாம் ஆடிப்பெருக்கின் விஞ்சான காரணத்தைக் காண்போம்.

ஆடிப்பெருக்கு திருநாள் ( Aadi Perukku Festival Reason In Tamil)

தமிழ் பாரம்பரியம் இன்று நாம் பின்பற்றுவது அதில் பாதிகூட இல்லை என்பது தான் நிசப்பத்தமான உண்மை ஆகும். இயற்கையும் இயற்கை வளமும் தமிழனின் வாழ்வியலில் அகற்ற முடியாத ஒன்றாகும்.  பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் மனித வாழ்வுக்கு முக்கியமான வளம் ஆகும். மனித வாழ்க்கை அடிப்படை வளமான நீர் இயற்கையின் பரிசாகும், இதை மதிக்கும் வகையில் ஆதி தமிழன் ஆடி மாதத்தில் 18 ஆம் நாளில் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கருதி தான் மட்டுமில்லாமல் தன் சந்ததியும் பின்பற்றவைத்தான். இந்த முறை நவநாகரியத்தில் பல மாற்றங்கள் அடைந்தாலும் இன்று வரை நம்மில் புழக்கத்தில் உள்ளது நிம்மதி கொள்ள வேண்டியதாகும்.

பெண்மையை மதித்த தமிழ் பாரம்பரியத்தில் வாழ்க்கை அளிக்கும் இயற்கை அன்னையின் ஆசியான நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளே ஆடிப்பெருக்கு விழா ஆகும்.  இந்த விழா "பதினெட்டாம் பெருக்கு" , "பதினெட்டு" என பல வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் (Adi Perukku Celebration Reason)

நதிகளைத் தாயாகப் பாவித்தும் வணங்கி நன்றி தெரிவிக்கும் இந்த திருநாளின் கொண்டாட்டம் நம் பாரம்பரியத்தில் முக்கியமானது. சங்க காலம் தொட்டு இன்று வரை பின்பற்ற வரும் இந்த ஆடிப்பெருக்கு திருவிழா (Aadi 2022 ) அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தார் உறவினருடன் மகிழ்ச்சியைப் பரிமாறி வரும் திருநாளாகும்.

ஆடி 18 தினத்தில் இன்று இருக்கும் முறை புதுமண தம்பதிகளை அவர் துணையின் தாய் வீட்டில் புத்தாடை அளித்து ஆசிர்வதிப்பதாகும். இன்னும் ஒரு சில இடங்களில் ஆடி மாதத்தில் தற்காலிகமாகப் பிரிந்திருக்கும் தம்பதியினர்கள் இந்த ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பின் தன் கணவருடன் இல்லம் திரும்புவதும் வழக்கமாகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்