Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lord Narasimha Story in Tamil: நரசிம்ம அவதாரத்திற்கு இப்படி ஒரு காரணமா..? வித்தியாசமா இருக்கே….!

Gowthami Subramani May 14, 2022 & 07:30 [IST]
Lord Narasimha Story in Tamil: நரசிம்ம அவதாரத்திற்கு இப்படி ஒரு காரணமா..? வித்தியாசமா இருக்கே….!Representative Image.

Lord Narasimha Story in Tamil: உலகத்தில் நடக்கும் அதர்மங்களை அழிக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று நரசிம்ம அவதாரம் ஆகும்.

அவ்வாறு, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததற்கான முக்கிய காரணம் இவையே. சத்யுகத்தில், காசிப முனிவர் மற்றும் தித்திக்கு இரணியர்கள் என அழைக்கப்படும் சகோதரர்கள் பிறந்தனர். அவர்கள் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் என்பவர்கள்.

இரணியர்கள் பிறப்பு

இவர்கள் இருவரும் மேலோகத்தில் மகாவிஷ்ணுவின் காவலராக இருந்தவர்கள். ஒரு நாள், இவர்கள் காவலர் வேலை செய்து கொண்டிருந்த போது மகாவிஷ்ணுவை தரிசிக்க வந்த முனிவர்களை அவதூறாகப் பேசி விஷ்ணுவை சந்திக்க விடாமல் செய்தனர். இதனால், கோபமடைந்த முனிவர்கள் இவர்கள் இருவருக்கும் சாபம் அளித்துள்ளார். அந்த சமயத்தில் தோன்றிய மகா விஷ்ணு, நீங்கள் செய்தது தவறு என்று காவலர்களுக்கு எடுத்துரைத்தார். அதே சமயம் காவலர்கள் தன் தவறை உணர்ந்து மகா விஷ்ணுவிடமும், முனிவர்களிடமும் மன்னிப்பு கேட்டனர் (Lord Narasimha Story in Tamil).

ஆனால், கொடுத்த சாபத்தை எடுத்துக் கொள்ள முடியாததால், மகாவிஷ்ணு இவர்கள் இருவருக்கும் இன்னொரு வாய்ப்பளித்தார். அதன்படி, “நீங்கள் இருவரும் என்ன வெறுத்தால், மூன்று யுகங்களில் என்னை வந்தடைவீர். என்னை விரும்பினால், 7 யுகங்களில் என்னை வந்தடைவீர்” என்று கூறினார். ஆனால், இரணியாக்சனாகப் பிறந்த காவலர் கூறியதாவது “உங்களை விட்டு ஏழு காலம் வரை தங்களால் பிரிந்திருக்க முடியாது. மூன்று காலத்திற்கு எதிரிகளாகவே இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

இந்த வகையிலேயே இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இருவரும் பூலோகத்தில் அரக்கர்களாகப் பிறந்தனர். இப்படி அரக்கர்களாய்ப் பிறந்து மூன்று யுகங்களுக்குள் விஷ்ணுவைச் சேர்ந்தடைய எண்ணினர். இவ்வாறே, பக்த பிரகலாதா, ராமாயணம், மகாபாரதம் போன்ற மூன்று வகை புராணங்களிலும் அரக்கர்களாய் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது (History of Narasimha Jayanti).

பக்த பிரகலாதா

இவ்வாறு பூமியில் பிறந்த இருவரும் பெரும் அட்டகாசங்களைச் செய்து வந்தனர். மக்களுக்குப் பெரும் துன்பங்களைக் கொடுத்து வந்தனர். அதில், முதலில் வராக அவதாரத்தில் மகாவிஷ்ணு தோன்றி இரணியாக்சன் வதைக்கப்பட்டான். அதன் பின், மகாவிஷ்ணுவை அழிப்பதற்கு இன்னும் சக்தி தேவை என அறிந்து பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்து பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்த வித ஆயுதத்தாலும், எனக்கு மரணம் நேரக் கூடாது எனப் பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்துள்ளார்.

பிரகலாதன் சிறப்பு

அந்த சமயத்தில், இரணியகசிபுவிற்குப் பிறந்த குழந்தை தான் பிரகலாதன். இவன் மகாவிஷ்ணு மேல் அளவுகடந்த பக்தியைக் கொண்டிருந்தான். ஆனால், இவனை இரணியகசிபு மிகவும் வற்புறுத்தியும், பள்ளிகளுக்கு இவர்கள் வழியான போதனைகளைக் கற்றுக் கொடுக்கவும் பல்வேறு வகைகளில் திட்டமிட்டார். ஆனால், எதற்கும் மடியாத பிரகலாதன், விஷ்ணு மட்டும் தான் கடவுள். அவரது புகழ் மட்டுமே இந்த உலகெங்கும் ஒலிக்கும் எனக் கூறினார். இதனால், கோபமடைந்த இரணியகசிபு பிரகலாதனைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்.

சதிச்செயல்

நிறைய வகையான முறைகளில் பிரகலாதனைக் கொல்லவும் முயற்சித்தார். இருட்டு அறையில் அடைத்தல், விஷ்ணு பக்தர்களுக்குத் தண்டனை அளிக்கும் இடத்திற்கு அனுப்பி தண்டனை கொடுத்தல், மலையிலிருந்து கீழே தள்ளி விடுதல், பாம்புகளை விட்டு கடிக்கச் செய்தல், நெருப்பில் போடுதல், விஷம் அருந்தச் செய்தல் இது போல ஏராளக்கணக்கான விஷயங்களைச் செய்து பக்தபிரகலாதனைக் கொல்ல முயன்றார்.

விஷ்ணு அவதாரம்

எல்லையை மீறி பிரகலாதனைத் துன்புறுத்த ஆரம்பித்தார் இரண்கசிபு. “தூணிலும் இருப்பார்… துரும்பிலும் இரும்பார்” என்ற பிரகலாதன் சொல்லிற்கு செவி சாய்த்த மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரத்தில் தோன்றினார். இரண்யகசிபு கொண்ட வரத்தால், இந்த அவதாரம் எடுத்து இரண்யகசிபை மடியில் வைத்து, அவனின் குடலை பிரித்து, உயிரை எடுத்தார் என்று கூறுவர். மேலும், இந்த காரணத்தினால் தான் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்று கூறப்படுகிறது (Lakshmi Narasimha Story in Tamil).

இரண்யகசிபு கொன்ற பிறகு, இவரது நரசிம்ம அவதாரத்தைத் தணிக்க பிரகலாதன் பாடிய பாடலே ஆகும்.

ஸ்ரீ மாதவா முகுந்தா பாபசம்காரா

திரிலோக ஜகன்மோகனா காரா

மாயாவதாரா.. ஜகன்நாதா… லோகாதிநாதா..

மச்சாவதாரத்திலே சோமனை வென்று வேதங்கள் காத்தனை…

தேவாசுரர் ஆண்ட பாற்கடல் கடைகின்ற கூர்மாவதாரம் கொண்டு

மந்த்ரமலி தாங்கி ஜெகன் மோகினியாக உருமாறி

வானமுதைத் தேவர்க்கு ஊட்டினை…

வாராவரூபம் கொண்டே சிறைப்பட்ட மூதேவியை மீட்டனை

அண்டத்தில் அண்டமுதுக்குள்ளனவானே ஜெகதீசனே

இன்று உன் மகிமையறியாத அய்யாணிக் கவசந்து

மெய்யானமுதூட்டி அடியார் என் குறை தீர்க்க நரசிங்கவதாரமாய்

இன்று யாம் என்னை ஆட்கொள்ளவே வந்தாயோ தேவா… பரந்தாமா…

வைகுண்ட வாசா.. வைகுண்ட வாசா..

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா..

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா..

விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும் உத்ர ரூபமே உடனே மாற்றுவாய்

விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும் உத்ர ரூபமே உடனே மாற்றுவாய்

கருணையான அருள் மழை பொழிந்திடும் வடிவமாக நீ வந்தே தோன்றுவாய்..

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா..

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா..

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா..

என்ற பக்திப்பாடலை பாடிய பிறகு மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரத்திலிருந்து சாந்தமானார் என்று கூறுவர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்