Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தை பாக்கியம் தரும் சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகம் 2023 எப்போது? தேதி & நேரம்.. | When is Vaikasi Visakam 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
குழந்தை பாக்கியம் தரும் சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகம் 2023 எப்போது? தேதி & நேரம்.. | When is Vaikasi Visakam 2023 in TamilRepresentative Image.

முருகனுக்குரிய விரத நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த வைகாசி விசாகம். அனைத்து மாதங்களிலும் விசாக நட்சத்திரம் வந்தாலும் வைகாசியில் வரும் விசாகத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால், இந்த தினத்தில் முருகப் பெருமான் அவதரித்த நாள் என்று நம்பப்படுகிறது. ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப் பெருமான். நெற்றிக்கண்ணில் உதித்த குழந்தை ஆயிரம் இதழ் கொண்ட தாமரை இதழின் மேல் காணப்பட்டது. பிறகு, சிவபெருமான் கார்த்திகை பெண்களை அழைத்து இந்த குழந்தையை வளர்க்குமாறு கூறினார். அப்போது, ஆறு கார்த்திகை பெண்களும் அந்த குழந்தை தொட்டவுடன் ஆறு உருவங்களாக மாறினர். 

அந்த ஆறு உருவங்களையும் அன்னை பார்வதி தேவி, ஒன்றாக சேர்த்து அனைத்ததும் ஒரே உருவமாக மாறி, ஆறு முகங்களுடன் காட்சி அளித்தனர். ஆறு முகங்களுடன் காட்சியளித்த நாள் தான் இந்த வைகாசி விசாகம். தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கனா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் வைகாசி விசாகம் முக்கிய விரத நாளாக பார்க்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். இத்தகையை சிறப்புக்குரிய வைகாசி விசாகம் இந்தாண்டு எப்போது வருகிறது என்பதை பார்க்கலாம். 

வைகாசி விசாகம் 2023:

தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசியில் பௌர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளையே வைகாசி விசாகம் என்கிறோம். இந்த விரத நாள் வருடந்தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டி வைகாசி விசாகமானது ஜூன் 02 ஆம் தேதி காலை 05.55 மணிக்கு துவங்கி, ஜூன் 03 ஆம் தேதி காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், செல்வ செழிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த சிறப்பு வாய்ந்த நாளில் விரதம் முருகப் பெருமானை மனமுருக வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்