Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in Tamil

Gowthami Subramani Updated:
மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பான மாதம் ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கும் சிறப்பான பலன்கள் இருக்கின்றன. அந்த வகையில், தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாதமானது, தமிழ் மாதங்களில் ஆன்மீக சிறப்புப் பெற்ற மாதமாகவும், புண்ணியமான மாதமாகவும் கருதப்படுகிறது.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

தனுர் மாதமான மார்கழி மாதம்

தனுர் மாதம் என அழைக்கப்படும் இந்த மார்கழி மாதமானது புண்ணியமான மாதமாக கருதப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஒரு நாளின் வைகறைப் பொழுதாக பிரம்ம முகூர்த்தத்தில் உருவாவதனால், இந்த மார்கழி மாதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த காரணத்திலேயே, பிரம்ம முகூர்த்தத்திலேயே பெண்கள் எழுந்து வாசலில் கோலமிட்டு, குளித்து விட்டு, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர்.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

பெண்களுக்கான மார்கழி மாதம்

இந்த மாதத்தில், பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கூறும் விதமாக அமைகிறது. அதாவது, பழங்காலப் புராணங்களின் படி, ஆண்டாள், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியால், அவரையே தன் மணவாளனாக அடைய விரும்பினாள். இதனால், கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு, பெருமாள் அருள் புரிந்தார். பிறகு, பங்குனி உத்திரத்தில் பெருமாள் ஆண்டாளை மணந்து கொண்டார். எனவே தான், பெண்கள் பாவை நோன்பு இருந்தால், அவர்கள் விரும்பிய கணவன் கிடைப்பார் என்று நம்பிக்கையுடன் கூறப்படுகிறது.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

மார்கழி நோன்பு (பாவை நோன்பு)

“மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாள்..” என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறிய சொற்களின் படி, மதி நிறைந்த நாளான திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் தோன்றக்கூடிய பௌர்ணமி நாளாகும். இத்தகைய சிறப்பு மிக்க திருவாதிரை தினமும், மார்கழி மாதத்திலேயே தோன்றுகிறது.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

மார்கழி நோன்பு இருக்கும் முறைகள்

சிறப்பு மிக்க மார்கழி மாதம் முழுவதுமே, கன்னிப் பெண்களுக்குரிய மாதமாக அமைகிறது. பெண்கள், இந்த மாதத்தில், விடிவதற்கு முன்பே எழுந்து, ஆற்றில் மார்கழி நீராடி, கரையில் பாவைக்களம் ஒன்றை அமைத்து, அதில் ஒரு பாவையையும் வடிவமைக்கின்றனர். பிறகு, அந்தப் பாவையை பூக்களால் அலங்கரிப்பர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாவையை சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும், வைணவக் கன்னியர்கள் கௌரி தேவியாகவும் வணங்கி வழிபடுகின்றனர். மேலும், பாவைப் பாடல்களான திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல்களைப் பாடி வணங்கி வேண்டிக் கொள்வர்.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

மார்கழி நோன்பு வேண்டும் பலன்கள்

கன்னிப் பெண்களுக்கு உரிய மார்கழி மாதத்தில், பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், வைணவக் கன்னிக்கு வைணவ அடியனாகவும், சைவக் கன்னிக்கு சிவனடியனாகவும் விளங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதம் இருப்பர்.

மேலும், இந்தப் பிறவி அல்லாமல் இன்னும் ஏழேழு பிறவிகளிலும், இறைவனை வணங்கி அடிமைத் தொண்டு செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்வர்.

இவ்வாறு தாம் வேண்டியது நடப்பதற்கு வேண்டிக் கொள்ளும் கன்னியர்கள், முடிவில் அனைவருக்கும் பொதுவாக இருக்குமாறு, ஊர் செழிக்க, நாடு செழிக்க, நாடெல்லாம் திங்கம் மும்மாரி பொழிய வேண்டும் என வேண்டிக் கொள்வர்.

மனதிற்குப் பிடித்த மணாளனைக் கைபிடிக்க உதவும் மார்கழி நோன்பு. | Margazhi Nombu in TamilRepresentative Image

திருமணமான பெண்கள் பலன்கள்

கன்னிப் பெண்கள் மட்டுமல்லாது, திருமணமான பெண்களும் தன் கணவன் என்றும் பிரியாமல் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வேண்டிக் கொள்வர். இது அவர்களுக்கு சிறப்பான மாதமாக அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்