Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மொஹரம் பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது? | Muharram 2023 History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மொஹரம் பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது? | Muharram 2023 History in TamilRepresentative Image.

ஹிஜ்ரா நாள்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் அல்லது மொஹரம் என்பது இஸ்லாமிய மாதங்களில் ரமலானுக்கு அடுத்து மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களில் சன்னி, ஷியா என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர். அவர்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வே மொஹரம். 

கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹீசைன் இப்னு அலி கொல்லப்பட்டத்தையடுத்து, ஷியாக்கள் மொஹரத்தை துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைப்பிடிக்கிறார்கள். அதாவது இந்த நாளில் இவர்கள் கருப்பு உடை அணிந்துக் கொண்டு மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வார்கள். இதை ஒரு பண்டிகையாகவே ஹைதரபாத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் கத்தி, பிளேடு போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயப்படுத்திக் கொண்டு தங்களுடைய துயரத்தை வெளிப்படுத்துவார்கள். 

அதுவே, சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர். அதாவது, இந்த மாதத்தின் 9 மற்றும் 10 நாளிலும் அல்லது 10வது நாள் மட்டும் உண்ணா நோன்பு வைத்து கொண்டாடுவார்கள். 

இஸ்லாமிய மாதங்கள் 2023:

1. மொஹரம்
2. சஃபர்
3. ரபி உல் அவ்வல்
4. ரபி உல் ஆகிர்
5. ஜமா அல் அவ்வல்
6. ஜமா அத்துல் ஆகிர்
7. ரஜப்
8. ஷஃபான்
9. ரமலான்
10. ஷவ்வால்
11. துல் கஃதா
12. துல் ஹஜ்ஜா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்