Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57
Exclusive

ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in TamilRepresentative Image.

ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறையில் (சுக்லா பக்ஷா) வரும் பஞ்சமியை 'நாகபஞ்சமி' என்பார்கள். இந்த நாள் 'கருட பஞ்சமி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷேசமான நாளில் விரமிருந்து கோயிலில் உள்ள நாக தெய்வங்களையோ அல்லது வீட்டில் நாக பொம்மையை வைத்தோ வழிபாடு செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்குவதோடு, சகோதரர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

நாக பஞ்சமி புராண கதை!

நாக பஞ்சமிக்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. மகாபாரதத்தின் படி, யமுனை நதியில் காளியா என்ற பெரிய விஷப்பாம்பு வசித்து வந்தது. இது ஆற்றங்கரையோரம் வாழ்ந்து வந்த கிராம மக்களை துன்புறுத்தி வந்தது. பாம்பு மிகவும் பெரியதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருந்ததால், கிராம மக்கள் ஆற்றுக்குள் செல்லவே பயந்தனர். ஒரு நாள், பகவான் கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பந்து ஆற்றின் உள்ளே விழுந்தது. அதை எடுப்பதற்காக கிருஷ்ணர் ஆற்றில் குதித்தார். 

அப்போது ஆற்றில் இருந்த பெரிய நாகம் காளியா கிருஷ்ணரை தாக்கியது. அப்போது கிருஷ்ணர் பாம்பை பிடித்து சண்டை போட ஆரம்பித்தார். காளியா உடனே கிருஷ்ணரின் சக்தியை உணர்ந்து அவரை விஷ்ணுவின் அவதாரம் என்பதை தெரிந்துக்கொண்டது. எதிர்காலத்தில் கிராம மக்களை துன்புறுத்தமாட்டேன் என்று உறுதியளித்து கிருஷ்ணருக்கு வாக்குக்கொடுத்தது. விஷப்பாம்பை கிருஷ்ணர் தனது சக்தியால் வென்ற அத்தகைய தினமே நாக பஞ்சமி என்று கொண்டாடுகிறார்கள்.

ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in TamilRepresentative Image

சகோதரர் - சகோதரியின் பாசம்!

இந்த நாக பஞ்சமி அனுசரிக்கப்படுவதற்கு பின்னால் மற்றொரு கதையும் உள்ளது. இது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் உணர்த்துகிறது. மதுராபுரிப்பட்டினத்தில் மதுரேஸ்வர ராஜு என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். எட்டு பேரில் அங்கம்மா தான் மூத்தவள். அவர்கள் 8 பேரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். எனவே, இந்த 7 சகோதரர்களும் தங்களது அக்காவை நன்றாக கவனித்துக் கொண்டனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சகோதரர்கள் விவசாய நிலங்களில் வேலை செய்து வந்தனர். அங்கம்மா, தன் சகோதரர்களுக்கு தினமும் உணவு சமைத்து, அவர்களுக்கு உணவளிக்க பண்ணைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள்.

ஒரு நாள், நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி என்று தெரியாமல், வழக்கம் போல் உணவு சமைத்து, தன் சகோதரர்களுக்கு எடுத்துச் சென்றாள். அந்த நாளில் தான் கருடன் தனது கொக்குகளில் பாம்பை பிடித்து சண்டையிட்டார். அப்போது பாம்பு விஷத்தை வெளியேற்றியது. இந்த விஷம் அங்கம்மாவுக்கு தெரியாமல் அவள் கொண்டு சென்ற உணவில் விழுந்தது. அது தெரியாமல் அவள் தனது சகோதரர்களுக்கு உணவளித்தபோது, ​​​​அவர்கள் அனைவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து இறந்தனர். என்ன நடந்தது என்று தெரியாமல் அலறி துடித்தவள், அதே உணவை சாப்பிட்டு அவளும் இறக்க முயன்றாள்.

ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in TamilRepresentative Image

சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒரு வயதான தம்பதியின் உருவம் எடுத்து பூமிக்கு வந்து அங்கம்மாவை சந்தித்தனர். தனது சகோதரர்களின் இறப்பை தாங்கிக்கொள்ளாமல் கடும் மனவேதனையில் இருந்த அங்கம்மாவை, பார்வது தேவி "ஏன் என் குழந்தை அழுகிறாய்?" என்று கேட்டார். "உன்னிடம் என் இதயத்தின் பாரத்தை அவிழ்த்தாலும், என் இதயத்தில் துளைக்கும் வலி குணமாகுமா? என் பிரச்சனையை உங்களால் தீர்த்து வைக்க முடியுமா?" என்று அங்கம்மா கேட்கிறாள். 

அதற்குப் பதிலளித்த பார்வதி தேவி, தெய்வீகப் புன்னகையுடன், "உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர்கள் நாங்கள்", எங்களிடம் உன் பிரச்சனையை கூறு என்று சொல்ல அங்கம்மா நடந்தவற்றை விளக்கினாள். நான் எனது பெற்றோரை இழந்து, தற்போது ஏழு சகோதரர்களையும் இழந்து நிற்கதியாக நிற்கிறேன்; இந்த சாபத்தை எங்கள் மீது கொண்டு வந்தது எது? என்று கூறி அழுகிறாள். நீ உன் முன்ஜென்மத்தில் கருட பஞ்சமி சடங்குகளைச் சரியாகச் செய்யாததுதான் உன் வேதனைக்குக் காரணம் என்று பார்வதி தேவி விளக்கினார்.

ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in TamilRepresentative Image

'நீ என்ன பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் மற்றும் தேவையான விஷயங்களை நான் விளக்குகிறேன். அது முடிந்ததும், தேவிக்கு அர்ச்சனை செய்து பாம்பு குழியின் அடிப்பகுதியில் இருந்து சிறிது புனிதமான சேற்றையும், அக்ஷதாவையும் (மஞ்சள் கலந்த பச்சை அரிசி), பூக்களையும் எடுத்து இறந்த உடன்பிறந்தவர்களின் மேல் வைத்துவிடு, எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்று பார்வதி தேவி கூற அங்கம்மாவும் வழிமுறைகளைப் பின்பற்றினாள். அதன்பிறகு, அங்கம்மாவும் அவளுடைய இறந்த சகோதர்களை உயிருடன் திரும்ப பெற்றாள். அத்தோடு இழந்த செல்வத்தையும் செழிப்பையும் திரும்பப் பெற்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்