Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி மாதம் வந்தா கூழ் தான் ஸ்பெஷல்… ஆனா, அதுக்கு பின்னாடி இருக்க சீக்ரெட் என்னனு தெரியுமா..?

Gowthami Subramani July 02, 2023 & 16:20 [IST]
ஆடி மாதம் வந்தா கூழ் தான் ஸ்பெஷல்… ஆனா, அதுக்கு பின்னாடி இருக்க சீக்ரெட் என்னனு தெரியுமா..?Representative Image.

Aadi Koozh Festival: ஆடி மாதம் என்றாலே அம்மனை வழிபடுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக ஆடி மாதத்தில் சிறப்பானது கூழ் தான். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பிரசாதமாக கூல் தரப்படுகிறது.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஆன்மீகக் காரணத்தையும், அறிவியல் காரணத்தையும் கொண்டு வந்துள்ளது.

ஆன்மீகக் காரணம்

ஜமத்கனி முனிவர் தவத்தில் சிறந்து விளங்கியவர். கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் ஜமத்கனி முனிவர் மீது பொறாமை கொண்டு கொன்று விட்டனர். இதை கேள்விப்பட்டு, துக்கம் தாங்காத ஜமத்கனி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கினார்.

அந்த சமயத்தில் இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்து விட்டார். ரேணுகாதேவி உடலில் தீக்காயங்களுடன் கொப்பளங்கள் ஏற்பட்டது. வெற்றுடலை மறைப்பதற்காக அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

அந்த சமயத்தில், ரேணுகா தேவிக்கு பசி ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.

அப்போது, மக்கள் ரேணுகாதேவிக்கு வெல்லம், இளநீர் மற்றும் பச்சரிசி உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுத்தனர். அதனைப் பெற்ற ரேணுகாதேவி கூழாகத் தயாரித்து உணவருந்தினார்.

அந்த நேரத்தில் ரேணுகா தேவியின் முன் சிவபெருமான் தோன்றினார். ரேணுகா தேவியிடம் அவர் கூறியதாவது, உலக மக்களின் அம்மை நோய் நீங்குவதற்கு நீ அணிந்திருந்த வேப்பிலை சிறந்த மருந்தாக உள்ளது. மேலும், நீ உண்ட கூழ் சிறந்த உணவாகக் கருதப்படும்.

மேலும், இளநீர் சிறந்த நீராகரமாகக் கருதப்படும் என வரம் அளித்தார். இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் தயாரித்து பிரசாதமாக வழங்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அறிவியல் ரீதியான உண்மைகள்

ஆடி மாதத்தில் வீசக்கூடிய காற்றின் வேகம் எப்போதும் இருப்பதை விட அதிகமாக இருக்கும். இதனால், தூசி அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, இருமல் போன்ற நோய்கள் வரக் கூடும். நோய் வராமல் தவிர்க்க கூழ் உதவும். ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றப்படும். இதனையே ஆடிக்கஞ்சி என கூறுவர்.

அது எப்படி, கூழ் மூலம் இருமல் குணமாகும் என்று நிறைய பேருக்குச் சந்தேகம் எழும். அதாவது, இருமலைக் குணப்படுத்தும் சீரகம், திப்பிலி, சின்னவெங்காயம், அதிமதுரம், திரிகடுகம், குன்னி வேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் போன்றவற்றை லேசாகத் தட்டி எடுத்துக் கொண்டு, அதனை வெள்ளைத் துணி ஒன்றில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின், அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும். அல்லது, துணிப்பொட்டலத்தைச் சிறுது நேரம் கஞ்சிக்குள் போட்டு ஊற வைத்து எடுத்து விடலாம். அதன் பிறகே, ஆடிக் கஞ்சியை பரிமாற வேண்டும்.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவதற்கு ஆன்மீக ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் அமைகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்