Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ruthratcham Aninthu Mamisam Unnalama: ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடலாமா..?

Manoj Krishnamoorthi July 17, 2022 & 19:40 [IST]
Ruthratcham Aninthu Mamisam Unnalama: ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடலாமா..?Representative Image.

சிவ தொண்டு செய்து சிவத்தை உணர்ந்த சிவனடியார்கள் எல்லோருமே ருத்ராட்சம் அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். நமக்கும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் என்ற ஆர்வம் எட்டிப்பார்க்கும். ஆனால், அதற்கு தடையாக இருப்பதாக நம்மில் பலர் நினைப்பது ருத்ராட்சம் அணிந்தால் கடுமையான நெறிகளைப் பின்பற்ற வேண்டுமோ..! உணவு முறையில் மாற்றம் கொள்ள வேண்டுமா..! என்ற சந்தேகம் இருக்கும். இந்த பதிவில் நம்மில் பலரின் சந்தேகமான ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடலாமா என்ற சந்தேகத்திற்கான பதிலைப் பார்ப்போம்.

ருத்ராட்சம் என்றால் என்ன? (Rudraksha)

ருத்ராட்சத்தின் மகத்துவத்தை சிவனடியார்கள் இது சிவத்தை உணர செய்யும் அடித்தளம் என்றும் கூறுவர், தன்னிலை மறந்து பரமாத்மா சிவன் தியானத்தில் இருந்த போது அவரின் கண்ணில் இருந்து வெளிவந்த கண்ணீர் துளியே ருத்ராட்ச மரமாக மண்ணில் உதித்ததாகக் கதைகள் உண்டு. சிவம் என்றால் அமைதியாகும் தியானம் இருந்து சிவத்தை உணரச் செய்யும் ருத்ராட்சம் நிச்சியமாகச் சிவ சொரூபமாகும்.

ருத்ராட்ச வகைகள் (Rudraksha)

மண்ணில் சிவனின் அம்சமாக உதித்த ருத்ராட்சம் பல முகங்களாக உள்ளது, அதில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்பாகும் (Benefits of Wearing Rudraksha), தற்போது மண்ணில்  21 முக ருத்ராட்சங்கள் இருந்தாலும் அதில் 14 முக ருத்ராட்சம் வரை மட்டுமே கிடைக்கிறது.மீதமுள்ள ருத்ராட்சங்கள் கிடைப்பது மிகமிக அரியதாகும். 


ஒவ்வொரு முக ருத்ராட்சத்தின் மகிமை. 


ருத்ராட்சம் அணிந்து மாமிசம் உண்ணலாமா? (Can we eat non veg after wearing rudraksha mala)

தினமும் காலையில் எழுந்து இறைவனை வணங்கி கொண்டு தான் இருக்கிறேன் அப்படி செய்தால் சிவ நிலை அடைய முடியாத என உங்கள் மனதில்  தோன்றுகிறது என்பது புரிகிறது, இப்படி வணங்கும் முறை தவறாகாது ஆனால் சிவ நிலை அடைவது என்பது மிகப்பெரிய தவம் ஆகும்.  இதற்கு முதல் அடியாக அமைவது தான் ருத்ராட்சம், இன்னும் எளியதாகக் கூற வேண்டுமென்றால் ருத்ராட்சம் ஒரு சக்தியை சேமிக்கும் ஒரு நீர்நிலையைப் போன்று செயல்படும். அந்த நீர்நிலையில் சேமிக்கும் நீரைப் பொருத்து தான் நீர்நிலையின் மகத்துவம் அமையும்.

எனவே, ருத்ராட்சம் என்பது சக்தி சேமிப்பு சொரூபமாகச் செயல்படும், அது நம் எண்ணவோட்டத்தை தான் மையப்படுத்துகிறது என்பது தான் உண்மையாகும், சரி..... ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா என்ற ஐயத்துக்கு பதிலைக் காண்போம். பொதுவாக சிவம் என்பது அமைதி என்பதைக் குறிக்கும். அசைவம் உட்கொண்ட பின் ஈசனை வணங்குவது ஒருபோதும் தவறாகாது. ஆனால், அமைதியை வேண்டும் முயற்சியில் நாம் மூர்க்கத் தனத்தை அளிக்கும் உணவையோ உண்பது சிவநிலை அடைய ஒரு தடையாக அமையும். 

சிவ நிலையை அடையும் நோக்கில் தடையாக இருக்கும் செயல் சிவ நிலையை அடைய உதவும் செயலுக்கும் தடையாகத் தானே அமையும், ஆகவே ருத்ராட்சம் அணியும்போது மாமிசம் உண்பது நாம் அணியும் நோக்கத்தைப் பெற உதவாது.  நம்மை ஒருநிலையில் இருக்க செய்ய உதவும் ருத்ராட்சம் அதன் மகத்துவம் மறையாமல் இருக்க நாம் ருத்ராட்சம் அணிந்தால் அசைவம் உண்ணாமல் இருப்பது சாலச்சிறந்தது.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும் | உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Ruthratcham Aninthu Mamisam Unnalama | Ruthratcham Aninthu Asaivam Sapidalama | Ruthratcham Aninthu Mamisam Sapidalama | Can We Eat Non Veg After Wearing Rudraksha Tamil | Can We Eat Non Veg After Wearing Rudraksha Mala | Rudraksha |  Can We Eat Non Veg After Wearing Rudraksha | Can We Wear Rudraksha While Eating Non-Veg Tamil |  Wearing Rudraksha Rules | Benefits Of Wearing Rudraksha | Ruthratcham Aninthu Asaivam | Can Non Vegetarian Wear Rudraksha Sadhguru

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்