Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்பது வியாழக்கிழமைகள் இப்படி விரதம் இருந்தால், எண்ணிய அனைத்தும் நடக்கும்…! – சாய்பாபா விரதம் இருக்கும் முறைகள்

Gowthami Subramani [IST]
ஒன்பது வியாழக்கிழமைகள் இப்படி விரதம் இருந்தால், எண்ணிய அனைத்தும் நடக்கும்…! – சாய்பாபா விரதம் இருக்கும் முறைகள்Representative Image.

வியாழக்கிழமை தோறும்

சாய்பாபாவின் அற்புதத்தைக் காணாதோர் இந்த உலகில் எவருமிலர். அவரை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் நாம் எண்ணிய அனைத்தும் நிறைவேறும் என்று கூறுவர். மற்ற கடவுளுக்கு விரதம் இருப்பது போலவே, சாய்பாபாவிற்கும் விரதம் இருந்து வழிபடுவோம். ஆனால், இதில் சிறிய அளவிலான மாற்றங்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நாள் சிறப்பு நாளாக அமையும். அதே போல, சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை நாள்கள் சிறப்பு நாளாகும். அதன் படி, சாய்பாபாவிற்கு ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால், எல்லா நன்மைகளும் நடக்கும் என்று கூறுவர். இந்தப் பதிவில், சாய்பாபாவிற்கு விரதம் இருக்கும் முறைகளைப் பற்றி காண்போம்.

நம்பிக்கை மற்றும் பொறுமை

சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று, விரதம் இருந்து வழிபட்டால் எத்தகைய துன்பங்களும் நீங்கி விடும். ஆனால், இதற்கு விரதம் இருந்தால் மட்டும் போதாது. நம்பிக்கை, பொறுமை இரண்டுமே மிகவும் முக்கியம். சாய்பாபாவிடம் மிகுந்த நம்பிக்கையுடனும், அவர் நாம் வேண்டிய அருளை கண்டிப்பாக செய்து தரும் வரை பொறுமையுடனும் இருப்பது அவசியம். இவ்வாறு நம்பிக்கையையும் பொறுமையையும் கைவிடாதவர்களை என்றும் சாய்பாபா கைவிட்டதில்லை.

நம்பிக்கை பொறுமை மனதில் வைத்து

நாளும் தொளுவார் நற்கதி பெறுவார்

ஒன்பது வியாழக்கிழமைகள் உண்பால்

அன்புடன் விரதம் இருப்பவர்க்கெல்லாம்

நன்மைகள் கிட்டும் துன்பங்கள் இல்லை

உண்மை இதுவென உரைத்தனை சாயி – என்ற பாடல் வரிகளின் மூலமே நன்றாக அறியலாம்.

விரதம் இருக்கும் முறைகள்

சாய்பாபாவிற்கு வியாழக்கிழமைகள் தோறும் அதாவது ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால், தீராத வினைகளும் தீரும் என்பது பொருள். சாய்பாபாவிற்கு விரதம் இருப்பதற்கான விரத விதிமுறைகள்.

இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் என அனைவருமே மேற்கொள்ளலாம்.

வியாழக்கிழமைகளில் விரதத்தைத் தொடங்கும் போது சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்க வேண்டும்.

தூய பக்தியுடன் வேண்டிக்கொண்டு விரதம் இருப்பது கண்டிப்பாக நடக்கும்.

எனவே, எந்த காரியம் நடக்க வேண்டும் என ஆரம்பிக்கிறோமோ அவை நடக்க வேண்டும் என விரும்பி தூய மனதில் சாய்பாபாவை எண்ணி வணங்கிட வேண்டும்.

விரதம் இருக்கும் சமயத்தில் காலை அல்லது மாலை நேரத்தில் சாயிபாபாவின் போட்டோவிற்குப் பூஜை செய்து வணங்க வேண்டும்.

சாய்பாபாவிற்கு விரதம் இருக்கும் போது, முழுவதுமாக பட்டினியாக இருந்து வழிபடக்கூடாது. முழு நேரம் விரதம் மேற்கொள்ளும் நபர்கள், பழங்கள், திரவியங்கள் உள்ளிட்டவற்றை உண்ணலாம்.

இவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள், பால் மட்டும் உண்டு காலை நேரம் மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

ஒரு தூய்மையான பலகையை எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள் துணையை விரித்து சாய்பாபாவை அதில் அமர வைக்க வேண்டும். பின்னர், மஞ்சள், குங்குமம் போன்றவற்றால் சாய்பாபாவிற்கு பொட்டு வைக்க வேண்டும்.

பிறகு, உங்களால் முடிந்த பிரசாதங்களைச் செய்து சாய்பாபாவிற்குப் படைக்க வேண்டும்.

 

பின்னர் மஞ்சள் நிற மலர்கள் அணிவித்து, பூஜை செய்யலாம். விரதம் இருக்கும் சமயத்தில் சாய்பாபாவின் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.

கோவிலில், சாய்பாபாவை வேண்டி, அங்கு வழங்கக் கூடிய பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

பெண்கள் 9 வியாழக்கிழமைகள் விரதம் இருக்கும் போது, மாதவிலக்கு அல்லது வேறு சில காரணங்களால், விரதத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அந்த சமயங்களில் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுக்காமல், அடுத்த வியாழக்கிழமையில் இருந்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

மேலும், வீட்டிலேயே விரதம் இருந்து வழிபடுபவர்கள் சாய்பாபாவிற்கு வைத்து வணங்கும் பிரசாதத்தை ஏழைகளுக்கு வழங்கலாம்.

இவ்வாறு ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருப்பவர்களுக்கு எல்லாம் நன்மைகளும் கிடைக்கும்.

இந்த முறைகளின் படி, விரதம் இருந்து சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் எண்ணிய காரியங்கள் நிறைவேறு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருவார் சாய்பாபா.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil ணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்