Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எளிமையாக கலசம் வைக்காமல் வரலட்சுமி பூஜை எப்படி செய்வது? | How to Do Varalakshmi Pooja 2023 at Home

Gowthami Subramani August 24, 2023 & 15:15 [IST]
எளிமையாக கலசம் வைக்காமல் வரலட்சுமி பூஜை எப்படி செய்வது? | How to Do Varalakshmi Pooja 2023 at HomeRepresentative Image.

பொதுவாக, வரலட்சுமி பூஜை என்றாலே, பெண்களுக்கு ஒரு சிறப்பான நாளாகும். இந்த நன்னாளில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வீட்டிற்கு அம்மனை அழைத்து, பூஜை செய்து வணங்குவதாகும். இதில் நிறைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த பூஜையில் பெண்கள் விரதம் இருந்து, வீட்டிற்கு சில பேரை அழைத்து பூஜை செய்த பின், தாம்பூலம் வழங்குதல் நடைபெறும்.

வரலட்சுமி விரதத்தின் பயன்கள்

இந்த சிறப்பான நாளில் கல்யாணம் ஆன பெண்கள் விரதம் இருப்பதன் மூலம் நீண்ட நாள்கள் தாலி பாக்கியத்தைப் பெறுவர் என கூறுவர். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டி விரதம் இருப்பர் என்று பொருள்.

வரலட்சுமி விரதம் இருந்து பழக்கம் இல்லாதவர்கள் புதிதாக செய்யலாமா?

பாரம்பரியமாக பெண்கள் நோன்பு இருந்து குடும்பத்தில் இந்த பூஜை செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த பூஜையில் இதுவரை பழக்கமில்லாதவர்கள் கலந்து கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு புதிதாக பழக்கம் இல்லாத நபர்களோ, கலசம் இல்லாமல் எளிதாக வரலட்சுமி பூஜை செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கன்ட முறைகளில் பூஜை செய்யலாம்.

மஞ்சள், சந்தனம் மற்றும் பச்சைக் கற்பூரம் போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனை பன்னீர் விட்டு கலக்கவும்.

நல்ல வாசனையாக குங்குமத்தை எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி போன்ற சாமிப்படங்களில் ஒன்றை எடுத்து அதில் மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான பலகை ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் கோலம் ஒன்றைப் போட்டுக் கொள்ளலாம்.

அம்மனுக்கு சிவப்பு கலர் உகந்தது என்பதால், சிவப்பு துணியை எடுத்துக் கொண்டு அதை பலகையில் வைத்துக் கொண்டு சாமிப்போட்டாவை பலகையின் மீது வைக்க வேண்டும்.

ஒன்பது புதிய அகல் தீபங்களை எடுத்துக் கொண்டு அதில் பொட்டு வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

நீங்கள் எடுத்துக் கொண்ட சாமிப்போட்டோவிற்குப் பக்கத்தில் குலதெய்வத்தையும், விநாயகர் போட்டோ அல்லது சிலையை வைத்துக் கொள்ளவும்.

பழ வகைகளை அம்மனுக்குப் படைக்கலாம். அதன் படி, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்டவற்றை வைக்கலாம்.

இந்த பூஜையில் நம்மாள் எது முடியுமோ அதை படைத்து அம்மனை வழிபடலாம்.

பூஜை செய்யும் போது, அம்மன் பாடல்களைப் பாடி அம்மனை தரிசிக்கலாம்.

இவ்வாறு எளிமையான முறையில் அம்மனை வணங்கி பூஜித்து சிறப்பான முறையில் வழிபடலாம்.

பூஜையில் சுமங்கலிப் பெண்களை அழைத்து உங்களால் முடிந்தவற்றை அளிக்கலாம்.

பூஜை முடித்த பிறகு பூஜையில் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்தாமல், வீட்டில் அரிசி வைத்திருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளவும்.

வீட்டில் அம்மன் இருக்கவும், அன்னம், ஆதாரம் என அனைத்தும் நமக்கு கிடைக்கவும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்