Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 1: பிராமணராய் பிறந்து முஸ்லீம் தம்பதியினருக்குக் குழந்தையான சாய்பாபா….!

Gowthami Subramani May 19, 2022 & 07:25 [IST]
Sai Baba History in Tamil Part 1: பிராமணராய் பிறந்து முஸ்லீம் தம்பதியினருக்குக் குழந்தையான சாய்பாபா….!Representative Image.

Sai Baba History in Tamil Part 1: கேட்டவற்றை அருளும் சாய்பாபாவினை அறியாதோர் இவ்வுலகில் எவருமிலர். சாய்பாபா தனது சக்தியின் மகிமையால், தனது பிள்ளைகளுக்கு எத்தகைய துன்பங்களையும் தராமல் பாதுகாத்து வருவார். என்ன சூழ்நிலை வந்தாலும், சாய் பாபாவை மனதில் நினைத்துக் கொண்டால், அனைத்துத் தடைகளும் விலகி அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அவ்வாறு, இந்த உலகிற்கே வெளிச்சத்தைத் தந்தவர் பூமியில் பிறந்த வரலாற்றையும், அவரின் சாகசங்களையும் இங்கு காண்போம்.

சாய்பாபா தோன்றிய வரலாறு

பத்ரி என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. அந்த காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் ஆண்டு வந்த காலம் அது. இந்தச் சிறிய ஊரில், ஓர் ஏழைத் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தை பிறக்கும் போதே ஓர் சிறப்பான சக்தியுடன் பிறந்த அபூர்வ குழந்தையாக எண்ணப்பட்டது. அதே சூழ்நிலையில், இந்த ஏழைத் தம்பதிக்கு குழந்தையைப் போற்றி வளர்க்க முடியாதே என்ற வருத்தம் நிறைய இருந்தது. மிகவும் ஏழ்மையில் இருக்கும் அவர்கள், எவ்வாறு குழந்தையை வளர்ப்பது என்ற அச்சம் அவர்களின் மனதில் எழுந்தது (Sai Baba History).

முஸ்லீம் தம்பதியினர் குழந்தை

அதே ஊரில், ஒரு முஸ்லீம் தம்பதி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இது அவர்களுக்குப் பெரிய ஏக்கமாக இருந்தது. இதனால், அன்றாட வாழ்க்கை வாழவே போராடும் இந்த தம்பதியினர் பெற்ற குழந்தையை, குழந்தை இல்லாத முஸ்லீம் தம்பதிக்கு வழங்க முன்வந்தனர். ஆவலோடு குழந்தையை வளர்த்து வந்த அந்த பெரியவருக்கு இன்னும் நான்காண்டுகளுக்குள் உயிர் பிரியும் தருணம் நெருங்கி விட்டது (Sai Baba Stories in Tamil).

A picture containing person, person

Description automatically generated

மகானிடம் ஒப்படைத்தல்

இதனால் அந்தப் பெரியவர், மனைவியை அழைத்து,”இந்த அற்புதக் குழந்தையை, சேலு கிராமத்தில் உள்ள கோபால் ராவ் தேஷ்முக் என்ற மகானிடம் சேர்த்து விடு. அவர் ஜமீன் தார் ஆவார். அவரிடம் ஒப்படைப்பதே எதிர்காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும்” எனக் கூறினார். ஆனால், இதைக் கேட்ட மனைவி சற்று யோசித்தாள். அவர் ஒரு பிராமணர். எவ்வாறு ஒரு முஸ்லீம் குழந்தையை ஏற்பார்? குழந்தையை வேண்டாம் என்று சொல்லிவிட்டால், குழந்தையின் மனம் பாடுபடுமே என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் (Shirdi Sai Baba History).

மனைவியின் சந்தேகம்

மனைவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட பெரியவர், “தயங்காதே! நாம் முஸ்லீமாக குழந்தையை வளர்த்திருக்கலாம். ஆனால், குழந்தையைப் பெற்ற ஏழைத் தம்பதியினர் ஒரு பிராமணத் தம்பதியினர் தானே? ஞானியான அந்தப் பெரியவர் இதைப் புரிந்து கொள்ள மாட்டாரா? அது மட்டுமல்லாமல், தன்னை நாடி வருபவரை அவர் வேண்டாம் என சொல்லுவாரா?” என்று வற்புறுத்தினார். இதனைக் கேட்ட மனைவி சமாதானம் அடைந்தார். பெரியவர் நிம்மதியுடன் கண்களை மூடிக் கொண்டார்.

பின், அந்தப் பெரியவரின் மனைவி குழந்தையை அந்த மகானிடம் ஒப்படைத்தாரா என்பதை அடுத்தப் பகுதியில் காண்போம்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்