Sat ,Jul 13, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

Pillayar Story in Tamil: பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவதற்கான காரணம் இவையா..?

Gowthami Subramani May 18, 2022 & 07:18 [IST]
Pillayar Story in Tamil: பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவதற்கான காரணம் இவையா..?Representative Image.

Pillayar Story in Tamil: முழுமுதற் கடவுளாய் விளங்குபவர் பிள்ளையார். எந்தவொரு விஷயத்தையும் நாம் முதலில் தொடங்கும் போது, பிள்ளையாரை முதலில் வழிபட்டால் மிகச் சிறப்பு என்று கூறுவர். இவர் எளிமையான கடவுளாகத் திகழ்கிறார். மேலும், இவரின் வழிபாடும் மிகவும் எளிமையானது.

கடைபிடிக்க வேண்டிய நியதிகள்

கடவுள்களில் கணபதி எனப் போற்றப்படும் பிள்ளையாருக்கு மிகச் சிறப்பு உண்டு. நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது செயல்கள் பிள்ளையாரை வழிபடும் போது, கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நியதிகளாக உள்ளது. இவ்வாறு விநாயகருக்குத் தோப்புக்கரணம் போடும் போது விநாயகர் மகிழ்ந்து நாம் எதிர்பார்த்த பலன்களை அளிப்பார் என நம்பப்படுகிறது.

தோப்புக்கரணம் போட காரணம்

இப்போது நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால், கண்டிப்பாக ஒரு புராணக்கதை இருக்கும். அதன் படி, தோப்புக்கரணம் போடுவதற்குப் பின்னாலும், ஒரு புராணக்கதை இருப்பதாக நம்பப்படுகிறது.

கணபதிக்கு முன்பு, இரண்டு கைகளையும் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொண்ட பிறகு, இரண்டு காதுகளில் மடல்களைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள்.  

புராணக்கதை

கஜமுகாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி மிகக் கடுமையான தவம் புரிந்தான். இந்த தவத்தின் பெற்ற வெற்றியால் பல சக்திமிக்க வரங்களை சிவபெருமானிடம் இருந்து பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பிறகு, மக்களுக்கும், தேவர்களுக்கும் எல்லையில்லாத அளவில் துன்பங்களைக் கொடுத்து வந்தான்.

மேலும், அந்தச் சமயத்தில், தேவர்களைச் சின்னக்குழந்தைகளைப் போல பாவித்து, காலை, மதியம் மற்றும் மாலை எனப் பாராமல், அவர்களைத் தொடர்ந்து 1,008 தோப்புக்கரணங்களைப் போட சொன்னான். இந்தக் கடுமையான சூழலில், உலக இயக்கத்துக்கு தங்களது கடமைகளை ஆற்ற முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். சிவபெருமானிடம் இதைக் கூறி வருந்தினர். மக்கள் மற்றும் தேவர்களின் துன்பத்தைப் போக்கச் சிவபெருமான் கஜமுகாசுரனை அழிப்பதற்காக விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தார்.

தொடங்கிய போர்

விநாயகப் பெருமானுக்கும், கஜமுகாசுரன் அரக்கனுக்கும் இடையே நடைபெற்ற போரில், கஜமுகாசுரனின் படை முற்றிலும் அழிந்து தனியாக இருந்தான். ஆனால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றதால், இவனை மட்டும் அழிக்க முடியவில்லை. அந்த சமயத்தில், விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து சிவ மந்திரத்தைச் சொல்லி கஜமுகாசுரனின் மீது வீசியுள்ளார். இதனால், கஜமுகாசுரனின் அசுர உருவம் அழிந்து பெருச்சாளி வடிவமாகி, விநாயகரைப் பணிந்து நின்றான்.

விநாயகப் பெருமானும், அவனை மன்னித்து தனது வாகனமாக்கிக் கொண்டார். இந்த நிலைமைகள் அனைத்தும் சகஜமானதால், தேவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி நெற்றிப் பொட்டில் கொட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டனர் எனக் கூறப்படுகிறது.

இன்னொரு கதை

இதே போல, ஒரு முறை தவமுனிவராக விளங்கும் அகத்தியர் கமண்டலமும், கையுமாக வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், விநாயகப் பெருமான் காகமாக உருவெடுத்து முனிவரின் கமண்டலத்தில் இருந்த நீரை தப்பி விட்டு ஓடி விட்டார்.

இவ்வாறு விநாயகப் பெருமான் தட்டி விட்ட கமண்டல நீர் ஆறாக விரிந்து பறந்து ஓடியது. இவ்வாறே பெருகி ஓடிய ஆற்றைத் தான் காவிரி என்று அழைக்கிறோம். அந்த சமயத்தில், அந்த கமண்டல நீரைத் தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பப் பார்த்துள்ளார். ஆனால், அந்த காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அப்போது, அந்த சிறுவன முனிவரைப் பார்த்து சிரித்தான். இதனால், கோபமடைந்த அகத்திய முனிவர், அந்தச் சிறுவன் தான், கமண்டல நீரை கவிழ்த்தான் என நினைத்து, அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் அடுத்த நொடியே விநாயப் பெருமானாகக் காட்சி தந்தார். இதனால், குட்ட முயன்ற தவறுக்காக அகத்தியர் வருந்தி, அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இந்த காரணத்தினாலும், விநாயகப் பெருமானுக்குத் தோப்புக்கரணம் இடுவர் என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்