Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

சனி பெயர்ச்சி 2023 எப்போது? நேரம்? | Sani Peyarchi 2023 Timings

Nandhinipriya Ganeshan Updated:
சனி பெயர்ச்சி 2023 எப்போது? நேரம்? | Sani Peyarchi 2023 TimingsRepresentative Image.

மனிதர்கள் மட்டுமல்லாது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளிக் கொடுப்பவர் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். அதுமட்மல்லாமல், நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி கிரகம். அதனாலேயே இவர் சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தின் அதிபதி பலம் குன்று இருந்தாலும் தொழில், கர்மா, ஆயுள் இந்த மூன்றுக்கும் அதிபதியான சனி பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம்முடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் இடத்தை வைத்தே தடைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் சனிபகவான் எங்கு அமர்ந்திருக்கிறாரோ அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படும் தடைகளை அகற்ற முடியும்.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 17 ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெயர்ச்சியாகிறார். 

அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்