Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in Tamil

Gowthami Subramani Updated:
சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image.

நீதிக்கடவுளாக விளங்கும் சனி பகவான், ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களைத் தருகிறார். மக்கள் தான் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ற பலன்களை அனுபவிப்பர். ஒவ்வொரு ராசிக்காரர்களும், சனி கிரகப் பெயர்ச்சியின் போது பல்வேறு பலன்களை அனுபவிக்கின்றனர். சனி பகவானின் ஆசி பெற்று, அவரின் நல்லருளைப் பெறுவதற்கு அவரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 போற்றிகளை இதில் காணலாம்.

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

சனி பகவான் 108 போற்றி

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி

ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி

ஓம் அலிக்கிரகமே போற்றி

ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி

ஓம் அனுஷத்ததிபதியே போற்றி

ஓம் அன்னதானப் பிரியனே போற்றி

ஓம் அசுப கிரகமே போற்றி

ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

ஓம் ஆயுட்காரகனே போற்றி

ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ௐம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் இளைத்த தேகனே போற்றி

ஓம் இரும்புத் தேரனே போற்றி

ஓம் இரும்பு உலோகனே போற்றி

ஓம் ஈடிலானே போற்றி

ஓம் ஈசுவரனானவனே போற்றி

ஓம் உக்கிரனே போற்றி

ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி

ஓம் உபகிரகமுளானே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி

ஓம் எள் விரும்பியே போற்றி

ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் ஏழாம் கிரகனே போற்றி

ஓம் கரு மெய்யனே போற்றி

ஓம் கலி புருஷனே போற்றி

ஓம் கழுகு வாகனனே போற்றி

ஓம் கருங்குவளை மலரனே போற்றி

ஓம் கரிய ஆடையனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி

ஓம் கருங்கொடியனே போற்றி

ஓம் கருநிறக் குடையனே போற்றி

ஓம் கண்ணொன்றிலானே போற்றி

ஓம் காகமேறியவனே போற்றி

ஓம் காசியில் பூசித்தவனே போற்றி

ஓம் காரியே போற்றி

ஓம் காற்றுக் கிரகமே போற்றி

ஓம் குளிர்க் கோளே போற்றி

ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி

ஓம் குளிகன் தந்தையே போற்றி

ஓம் குறுவடிவனே போற்றி

ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி

ஓம் கைப்புச்சுவையனே போற்றி

ஓம் சடையனே போற்றி

ஓம் சமரிலானே போற்றி

ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி

ஓம் சனிவார நாயகனே போற்றி

ஓம் சாயை புத்ரனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் சுடரோன் சேயே போற்றி

ஓம் சூரனே போற்றி

ஓம் சூலாயுதனே போற்றி

ஓம் சூர்ய சத்ருவே போற்றி

ஓம் சுக்ர நண்பனே போற்றி

ஓம் சிவனடியானே போற்றி

ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி

ஓம் சீற்றனே போற்றி

ஓம் செயலறச் செய்பவனே போற்றி

ஓம் தமோகணனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி

ஓம் தனிக்கோயிலுளானே போற்றி

ஓம் தீபப் பிரியனே போற்றி

ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி

ஓம் துலாராசியிலுச்சனே போற்றி

ஓம் துயரளித்தருள்வோனே போற்றி

ஓம் தைரியனே போற்றி

ஓம் தொலை கிரகமே போற்றி

ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி

ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி

ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி

ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி

ஓம் பயங்கரனே போற்றி

ஓம் பக்கச் சுழலோனே போற்றி

ஓம் பத்மபீடனே போற்றி

ஓம் பத்திரை சோதரனே போற்றி

ஓம் பிணிமுகனே போற்றி

ஓம் பிரபலனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் பீடிப்பவனே போற்றி

ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி

ஓம் புஷ்பப்பிரியனே போற்றி

ஓம் புதன்மித்ரனே போற்றி

ஓம் பூசத் ததிபதியே போற்றி

ஓம் பேதமிலானே போற்றி

ஓம் பைய நடப்பவனே போற்றி

ஓம் போற்றப்படுபவனே போற்றி

ஓம் மகரத்தாள்பவனே போற்றி

ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் மதிப்பகையே போற்றி

ஓம் மநு சோதரனே போற்றி

ஓம் முடவனே போற்றி

ஓம் முதுமுகனே போற்றி

ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி

ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி

ஓம் மேல் திசையனே போற்றி

ஓம் மேற்கு நோக்கனே போற்றி

ஓம் யமுனை சோதரனே போற்றி

ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

சனி பகவானின் துன்பத்திலிருந்து விடுபட சனி பகவானின் 108 போற்றிகள்..! | 108 Sani Potri in TamilRepresentative Image

ஓம் வன்னி சமித்தனே போற்றி

ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி

ஓம் வக்கரிப்பவனே போற்றி

ஓம் வளை மூன்றுளானே போற்றி

ஓம் வில்லேந்தியவனே போற்றி

ஓம் வில்வப் பிரியனே போற்றி

ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் சனீஸ்வரனே போற்றி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்