Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைகாசி அமாவாசை 2023: நேரம், தேதி மற்றும் முக்கிய வழிபாடு..! | Vaikasi Amavasai 2023

Gowthami Subramani Updated:
வைகாசி அமாவாசை 2023: நேரம், தேதி மற்றும் முக்கிய வழிபாடு..! | Vaikasi Amavasai 2023Representative Image.

வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை தினமானது பல்வேறு விதமான பலன்களைக் கொண்டுள்ளது. அதன் படி, வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம் வரக்கூடிய நாள், நேரம், தேதி மற்றும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் குறித்த விவரங்களை இதில் காணலாம்.

வைகாசி அமாவாசை 2023

வைகாசி மாதமானது வளங்களை அள்ளித் தரக்கூடிய “மாதவ மாதம் ” எனவும், வைகாசம் எனவும் அழைப்பர். இந்த அற்புத மாதத்தில், புனித நதியில் நீராடி மகாவிஷ்ணுவை வணங்கி துளசி இலைகளைக் கொண்டு பூஜை செய்யலாம். இவ்வாறு செய்தால், நற்பேறு கிடைக்கும். இதனுடன், வைகாசி மாதத்தில் மற்றொரு சிறப்பாக குலதெய்வத்தை வழிபட வேண்டியது சிறப்பாகும். இந்த மாதத்தில் குலதெய்வத்தை வேண்டி, கும்பத்தை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் வழிபடுவதால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

வைகாசி அமாவாசை 2023 நேரம் மற்றும் தேதி:

இந்த 2023 ஆம் ஆண்டின் அமாவாசையானது வைகாசி 05 ஆம் நாள், அதாவது மே மாதம் 19 ஆம் நாள் வருகிறது. இந்த அமாவாசையானது இன்று அதாவது மே 18 ஆம் நாள் இரவு 10.09 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி, மே 19 ஆம் தேதி இரவு 09.47 மணி வரை அமாவாசை திதி நீடிக்கிறது.

இந்த வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமானது மற்றொரு சிறப்பாக கார்த்திகை விரத தினம் வருகிறது. எனவே, இத்தினத்தில் முருகப்பெருமானின் அருளையும், ஆசியையும் பெற முருகனின் பூரண அருளைப் பெறலாம். மேலும், அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்த பிறகு, சிவன் கோவில் அல்லது முருகப் பெருமான் கோவில் சென்று வழிபடுவதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

இந்நாளில் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே காகத்திற்கு கறுப்பு, வெள்ளை எள் கலந்த அன்னம் அளித்து வழிபடலாம். மே மாதம் கார்த்திகை தினத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் வழிபாஅடு செய்தால், நீண்ட ஆயுள், செல்வ வளம் உங்களுக்குக் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்