Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களே உஷார்..! வரலட்சுமி விரத தினத்தில் தெரிந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்.. | Varalakshmi Nombu 2023 in Tamil

Gowthami Subramani August 23, 2023 & 14:55 [IST]
பெண்களே உஷார்..! வரலட்சுமி விரத தினத்தில் தெரிந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்.. | Varalakshmi Nombu 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு ஆடி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை நாள்களில் வரலட்சுமி விரத தினம் கொண்டாடப்படுகிறது. இது சுமங்கலிப் பெண்களுக்கு மட்டுமல்லாமல், கல்யாணம் ஆகாதவர்களும் இந்த விரதத்தில் பங்கேற்கலாம்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் பொதுவாக ஆடி மாதத்தில் வரும் 3 அல்லது 4 ஆவது வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் இந்த தினத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதன் மூலம் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க வேண்டும். அதே போல, கல்யாணம் ஆகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து நல்ல கணவன் அமைய வேண்டுவர்.

விரதத்தை கடைபிடிக்கும் முறை

வரலட்சுமி விரத தினத்தன்று வீட்டிற்கு அம்மனை அழைத்து வருதல் நிகழ்வு நடக்கும்.

அதன் படி, வீட்டின் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்பி, சந்தனத்தால் ஆன அம்மன் முகத்தை எழுப்ப வேண்டும்.

சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதனை ஒரு பலகை மீது வைக்க வேண்டும்.

பிறகு, சிலைக்கு முன் பிரசாதங்களை வைத்து சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு அதில் புனித நீர் நிரப்பி, மாவிலையுடன் தேங்காயை வைத்து, அரிசின் நடுவில் வைக்க வேண்டும்.

கும்ப பூஜைக்குப் பிறகு, பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். பின்பு, அஷ்ட லட்சுமிகளுக்குப் பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம்.

வரலட்சுமி விரத நாளில் செய்யக் கூடாதவை

வரலட்சுமி விரத நாளன்று விரதம் இருந்து அம்மனை நம் வீட்டிற்கு அழைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில், என்ன செயல்களைச் செய்யக்கூடாது உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பூஜையின் போது, பூஜை முடிந்த பின்போ நாம் செய்யும் ஒரு சில தவறுகளால், பூஜையினால் கிடைக்க வேண்டிய பலன்கள் நமக்குக் கிடைக்காமல் போகிறது.

வாலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், வீட்டிற்கு சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்குத் தாம்பூலம் தருவார்கள். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். விரதம் இருந்து இவ்வாறு வீட்டிற்கு அழைத்து பூஜை செய்பவர்கள் கண்டிப்பாக இதைப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட வழிமுறைகளோடு தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்வது சிறந்தது. அதன் படி, பக்கத்து அல்லது உறவினர் வீட்டில் பூஜைக்காக சென்று தாம்பூலம் வாங்க நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பாகவே சென்று வாங்கி விட்டு வரலாம். உங்கள் வீட்டில் பூஜை செய்த பிறகு, மற்றொருவர் வீட்டிற்குச் சென்று பூஜை பொருள்களை வாங்கி வருதல் கூடாது.

கலசம் வைத்து வழிபடும் போது, அப்போது கலசத்தில் வைக்கப்படும் பொருள்களை முறையாகச் செய்ய வேண்டும். கலசத்தில் நாம் வைக்கப்படும் பச்சரிசியை முறையாக உபயோகிக்க வேண்டும். இவ்வாறு கலசத்தில் இருந்து பெற்ற பச்சரிசியை கொஞ்சமாக எடுத்து பச்சரிசி பொங்கல் செய்து விட வேண்டும். மீதியை அன்னபூரணியாக அனுசரிக்கும் தானியம் இருக்கும் இடத்தில் இதனைச் சேர்த்து விடலாம்.

குறிப்பாக, பச்சரிசியைப் பயன்படுத்தி காரமாக செய்வதைத் தவிர்த்து, பொங்கல் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து உண்ணலாம்.

மேலும், பச்சரிசியுடன் சேர்த்து கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற ஒரு சில முக்கியமான பொருள்களை எடுத்து நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் கட்டாயம் நம் வீட்டில் பணம் பெருகும் எனக் கூறப்படுகிறது.

கலசத்தில் பயன்படுத்தும் தேங்காய் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், நாம் கட்டாயம் இனிப்பு பொருளாக செய்து கொள்ள வேண்டும். கட்டாயம் காரம் சார்ந்த உணவுப் பொருள்களைச் செய்தல் கூடாது.

வீட்டில் அம்பிகையை வரவழைக்க வைக்கப்படும் தாம்பூலங்களில் உள்ள பொருள்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் நாம் அப்புறப்படுத்தாமல், முறையான பயன்பாட்டிற்கு உபயோகிக்க வேண்டும். இது போல, மங்களப் பொருள்கள் வைத்து பூஜை செய்யலாம்.

அது போலவே, நாம் அடுத்தவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது பெற்ற தாம்பூலத்தினையும் முறையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மற்ற வீடுகளுக்குச் சென்று கிடைத்த பொருள்களை, உங்கள் வீட்டில் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் தாம்பாலத்தில் வைத்து அனுப்பக் கூடாது.

நீங்கள் வைத்திருக்கும் பூஜை பொருள்களை உபயோகப்படுத்தவில்லை எனும் போது அதனை ஒரு கவரில் போட்டு பீரோவில் வைத்துக் கொள்ளவும்.

வரலட்சுமி விரத நாளில் இது போன்ற முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்