Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

தொட்டதெல்லாம் துலங்கும்...! கைபட்டதெல்லாம் பொன்னாகும்.. கடவுளே கொடுத்தருளும் சீதனம்! ஆடிப்பெருக்கில் பெண் ராசிகளுக்கு அள்ளித் தரும் அதிர்ஷ்டம்!

UDHAYAKUMAR August 02, 2022 & 14:22 [IST]
தொட்டதெல்லாம் துலங்கும்...! கைபட்டதெல்லாம் பொன்னாகும்.. கடவுளே கொடுத்தருளும் சீதனம்! ஆடிப்பெருக்கில் பெண் ராசிகளுக்கு அள்ளித் தரும் அதிர்ஷ்டம்!Representative Image.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதைப் போலவே ஆடி பெருக்கில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். நீரோட்டம் காரணமாக வளம் கொழிக்கும். வயல்வெளிகளில் நெற்கதிர்களோடு கொக்குகளும் பூத்துக் குலுங்கும்.  இதனாலேயே ஆடிப் பெருக்கு விழா தமிழகத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களுக்கு அள்ளித் தரும் யோகமும் கொட்டோ கொட்டென்று கொட்டித் தர போகிறது. பெண் ராசிகளுக்கு உரிய பலன்களை இப்போது காண்போம். 

ஆடிப்பெருக்கு தினத்தில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்து பாருங்க… கோடி நன்மைகள் வீடு தேடி வரும்..!

மேஷம் (Mesha rasi aadi matha rasi palan)

வீட்டில் பூஜை செய்யும் முறை சரியானது தானா..! - Seithipunal

மேஷ ராசிக்கார பெண்களே! உங்களின் பாசிடிவ்வான ஹானஸ்ட் ஃபிகேவியர் உங்களது தொழிலில் நல்ல பலன்களை அள்ளித் தரும்,  வியாபாரத்தில் இதுவரை இல்லாத லாபம் உண்டாக்கும்.  எனினும் அந்த லாபத்தை எளிமையாக பெற முடியாத சூழல் உண்டு. லாபத்தை பெற கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்க வேண்டும். கடின உழைப்புக்கு பெயர் பெற்ற  உங்களுக்கு அது அல்வா சாப்பிடுவது மாதிரிதான். 

குடும்ப வாழ்க்கையில் கட்டாயம் கவனம் தேவை.  இல்லறத்திலும்,  காதல் வாழ்விலும் நீங்கள்  பொறுமையாக போக வேண்டியது அவசியமாகும். குடும்ப நபரின் மனதை புரிந்து கொள்ள இன்று ஒரு சந்தர்ப்பம் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  

ஆடிப்பெருக்கினால் உங்களின் வாழ்க்கை நலமாகும். குழப்பங்கள் தீரும். ஆடிப்பெருக்கின் போது நல்ல சேதி தேடி வரும். 

ரிஷபம் (Rishaba rasi aadi matha rasi palan)

பூஜை அறையில் இருக்க வேண்டியவை | Poojai kurippu

உங்களின் சாதுரியமான குணத்தால் பிறரை எளிதில் கவர்வீர்கள்.  சிலருக்கு  ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும் சிலரோ கடவுள் நம்பிக்கையின்றி இருந்தாலும், செய்யும் தொழிலை தெய்வமாக வழிபடும் எண்ணம் உடையவர்களாக இருப்பீர்கள்.   தொழிலில் உறுதியான திருப்தி இருக்கும்.  

ஆடிப்பெருக்கில் நீங்கள் நிச்சயம் பண வரவை எதிர்பார்க்கலாம். வீட்டில் சுப காரியங்களுக்கு முதல் படி போடப்படும் நாளாக இது அமையும். தங்கம் வாங்கினால் உங்கள் சேமிப்பு மிக அதிகமாக கூடும். வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் செல்வம் தங்கமாக மாற்றும் யோசனை ஏற்படும். 


சிம்மம் (Simma rasi aadi matha rasi palan)

Amman Temples in Tamilnadu - Tamilnadu Tourism Travels

பிறரின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் உங்களுக்கு இன்றைய நாள் உங்களின் பிரச்சனை மனதில் பயத்தை அளிக்கும், பேச்சின் மூலம் சில சண்டைகளை இழுத்து கொண்டு வருவீர்கள். முக்கியமான பணியிடத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தொழிலின் முடிவு உங்களுக்கு பதட்டத்தை உருவாக்கும். செல்வ நிலையில் செலவு தான்  உயர்ந்து இருக்கும். 
வீட்டில் நட்பான முறையில் நடந்து கொள்ளுவீர்கள், கணவன் மனைவி உறவில் பிரச்சனை குறையும். நெருங்கிய நபர்களுக்கு சிறிய மருத்துவ செலவு உருவாகும். உடல்நலத்தில் தூக்கமின்மை சோர்வைத் தரும். அச்சம்! 

ஆடிப் பெருக்கு இதுவரை இருந்த கஷ்டங்கள் கரையத் துவங்கும் நாள். காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல துன்பங்கள் கரைந்தோடி, இன்பங்களுக்கான நாட்களைத் தேடி பயணத்தைத் தொடங்குவீர்கள்.  

கன்னி (Kanni rasi aadi matha rasi palan)

File:Fam God Amman.jpg - Wikimedia Commons

தன்மையான பேச்சால் பிறரிடம் இருந்து வேலையை நடத்தி கொள்ளும் உங்களுக்கு இன்று தொழில் ஸ்தானம் கடினமாக இருக்கும். குறித்த வேலையை முடிக்க மிகவும் சிரமமாக இருக்கும். கையில் போதுமான அளவு பணம் இருக்காது. 
வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், குடும்பத்தில் சில முக்கிய முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும்.  காதல் வாழ்க்கை விரிசல் ஏற்படும். மனதின் பதட்டம் உடல்நலத்தைக் கெடுக்கும். சிரமம்!

பெண்களின் பிறந்த வீட்டிலிருந்து நல்ல சேதி வரும். அந்த நல்ல சேதியும் இந்த பெண்ணாலேயே துவங்கி, நிறைவடையும். திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்டவை சேதியாக வந்து சேரும். 

கும்பம் ( Kumba rasi aadi matha rasi palan)

கற்பூர நாயகியே .! கனகவல்லி

பேச்சு சாதுரியத்தால் அனைவரையும் ஈர்க்கும் நீங்கள் பேச்சால் இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும், அலுவலகத்தில் சுமுகமான நிலை காணப்படாது. உங்கள் செயல் சிறிய குழப்பத்தை விளைவிக்கும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.
வீட்டில் இன்று நீங்கள் பொறுமை காக்க வேண்டும், உங்களால் குடும்பத்தில் வாக்குவாதம் உருவாகக் கூடும். நண்பர்களிடம் ஆதாயம் எதிர்பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம்!

அறிவில் சிறந்தவர்களாகிய கும்ப ராசி பெண்களே. உங்களின் யோசனைகள் கிளிக் ஆகி, வியாபாரத்தில், கம்பெனியில் நல்ல யோசனைகள் இம்பிளிமண்ட் செய்யப்பட்டு அதை வியாபாரமாக ஆக்கும் திறமைகள் கூடி வரும். புகழ் அதிகம் வந்து கொண்டிருந்தாலும் தேவையற்ற செலவும் இருக்கலாம். நன்றாக யோசித்து முதலீடுகள் செய்வது நல்லது. உங்களால் மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்