Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா? வரலட்சுமி பூஜை செய்யலாமா? எப்படி செய்வது? | Varalakshmi Viratham 2023 in Tamil

UDHAYAKUMAR August 24, 2023 & 06:07 [IST]
கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா? வரலட்சுமி பூஜை செய்யலாமா? எப்படி செய்வது? | Varalakshmi Viratham 2023 in TamilRepresentative Image.

கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி பூஜையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். சிலரோ கர்ப்பம் ஆகிவிட்டாலே பூஜை செய்யக்கூடாது என நினைத்துக் கொண்டு அதையே பலரிடமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி நோன்பு இருக்கலாமா? கூடாதா அப்படி இருக்கலாம் என்றால் எப்போது வரை இருக்கலாம்? நிறை மாத கர்ப்பிணிகளுக்கு என்ன வரைமுறை என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். 

திருமணம் ஆகாத பெண்கள் பலரும் வரலட்சுமி நோன்பு இருந்து பூஜை செய்து லட்சுமியை வழிபடுவது தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. நல்ல கணவன் வேண்டும், நல்லபடியாக வாழ்க்கை செல்ல வேண்டும், குழந்தை குட்டி என வளமான வாழ்க்கைக்காக அவர்கள் பூஜை செய்வார்கள். ஆனால் வரலட்சுமி விரதம் கணவன்மார்களுக்காக அவர்களின் நலனுக்காக மனைவிமார்களால் செய்யப்படும் ஒரு பூஜை. 

திருமணமான புதிதில் பலர் இந்த விரத முறைகளை கடைபிடிப்பார்கள். பெண்கள் கர்ப்பம் ஆகிவிட்டாலும் இந்த நடைமுறையை பின்பற்றலாம். ஆனால் அதற்கு சில வழிமுறைகளும் உள்ளன. 

நீங்கள் இப்போதுதான் கர்ப்பமாகியிருக்கிறீர்கள் என்றாலோ 3 முதல் 6 மாத காலம் ஆகியிருக்கிறது என்றாலோ தாராளமாக மற்ற பெண்களின் உதவியுடன் வரலட்சுமி விரதமிருந்து வழிபாட்டை தொடரலாம். அந்த பெண்கள் உங்கள் மாமியாரோ, அம்மாவோ, பெரியம்மா, சின்னம்மா வகையிலோ இருக்கலாம். ஆனால் வயதில் மூத்தவர்களாக இருப்பது கட்டாயம். 

ஆனால் 6 மாத காலத்தைத் தாண்டிவிட்டால், சில விசயங்களைத் தவிர்க்க வேண்டும் என பெரியவர்கள் கூறுகிறார்கள். அதற்கு காரணம் வயிற்றில் உள்ள குழந்தையின் நலனும் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் நலனும்தானே தவிர, கடவுளைக் காண கர்ப்பிணிகள் செல்லக்கூடாது என்பதல்ல. நீங்கள் மட்டுமே வீட்டில் இருக்கும்போது சாதாரணமாக பூஜை செய்யலாம். ஆனால் குனிந்து நின்று அதிக பாரம் வயிற்றில் விழுமாறு செய்யக்கூடாது. 

பொதுவாகவே வரலட்சுமி விரதம் இருப்போர்கள் காலை, மதிய உணவு சாப்பிடாமல் இரவு 7 மணிக்கு பிறகே பெரும்பாலும் சாப்பிடுவார்கள். ஆனால் கர்ப்பிணி பெண்கள் அப்படி செய்யமுடியாது என்பதால் லைட் ஃபுட் வகையில் ஏதாவது சாப்பிடலாம், முந்தையநாள் சாமிக்கு படைத்த பழங்கள் ஏதாவது சாப்பிடலாம். நீர் அடிக்கடி குடித்து வரவேண்டும் என்பதை மறந்து விடவேண்டாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்