Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் விநாயகர் சதுர்த்தி 2023 பூஜை செய்வது எப்படி..? | Vinayagar Sathurthi 2023 Pooja In Home

Manoj Krishnamoorthi September 07, 2023 & 09:30 [IST]
வீட்டில் விநாயகர் சதுர்த்தி 2023 பூஜை செய்வது எப்படி..? | Vinayagar Sathurthi 2023 Pooja In HomeRepresentative Image.

சங்கடம் தீர்க்கும் கணபதியாரின் விஷேசமான நாள், விநாயகர் சதுர்த்தி ஆகும். சினிமாவில் டைட்டில் சாங் தொடங்கி கிளைமேக்ஸில் ஊர்வலமாகக் கணேசனை சினிமாவில் பயன்படுத்தாது இடமே இல்லை.... சினிமா எங்க இருந்து வந்தது நம் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகளைப் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து சொல்வது தான் சினிமா ஆகும். ரீலும் சரி ரியலிலும் சரி  விநாயகர் வழிபாடு என்றாலே கொண்டாட்டம் தான்.  திருவிழா கொண்டாட்டம் கொண்ட விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வீட்டிலே விநாயக பெருமானை வழிபடுவது எப்படி என்று என்பதைப் பற்றி அறிய வேண்டுமா.....? இந்த பதிவு உங்களுக்கு சிறந்த வழிகாட்டலாக இருக்கும்.  

பூஜை நேரம் (Vinayagar Poojai 2023 In Tamil )

பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நேர வழிபாடு தான் சாலச் சிறந்தது, மாலை நேரத்தில் வழிபாடு செய்ய முடியாத சூழலில் அதிகாலையில் செய்யலாம். விரதம் இருந்து வழிபாடு செய்ய விழையும் பக்தர்களும் மாலை நேரம் வரை காத்திருந்து சந்திரன் வந்த பிறகு வழிபாடு செய்யலாம், முடியாத நிலையில் மதிய வேளையில் நைவேத்தியம் பொருளை வாழை இலையில் படைத்து  நைவேத்தியம் செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம்.

வீட்டில் எப்படி வழிபாடு செய்வது? (Home Remedies For Vinayagar Chathurthi 2023 Pooja In Tamil) 

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி ஆகும். எந்த தொழில் செய்தால் அங்கு முதல் வணக்கம் விநாயக பெருமானுக்கு தான் கிடைக்கும். பக்தர்களின் சங்கடங்களைத் தீர்க்கும் கணபதியை விநாயகர் சதுர்த்தி அன்று  வணங்கினால் குறையாத செல்வம், குழந்தை பேறு, திருமண தடை போன்றவை கிடைக்க செய்யும்.

  • அதிகாலையில் எழுந்து நீராடி நம்மை தயார் செய்த பின், ஒரு விநாயகர் சிலை அல்லது படத்தை வீட்டில் பூஜை செய்ய போகும் இடத்தில் வைக்கவும்.
  • விநாயகர் உருவத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து புஷ்பங்கள் சாற்ற வேண்டும். பின்னர் விநாயகருக்கு விருப்பமான அருகம்புல் நிச்சியம் வைத்திருக்க வேண்டும்.
  • விநாயகர் பெருமானுக்கு நைவேத்தியம் செய்ய லட்டு, சர்க்கரை கலந்த அவல் அல்லது சர்க்கரை பொங்கல் மற்றும் கொழுக்கட்டை படைத்தல் வேண்டும். அத்துடன் ஒரு தாம்பாளத்தில் வாழைப்பழம் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும். இவற்றை  வைக்க முடியாத சூழலில் ஒரு கின்னத்தில் பால் வைத்து நைவேத்தியம் செய்யலாம். 
  • நைவேத்தியம் முடிந்த விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் விரதத்தைப்  பிரசாதத்தை சாப்பிட்டு முறித்து கொள்ளலாம். 

ஒருவேளை நாம், மண்சிலை வைத்து வழிபாடு செய்தால் மூன்று நாட்கள் செய்தல் வேண்டும், 

  1. முதலில் திதி அன்று, மேற்கண்ட முறையில் வழிபாடு செய்ய வேண்டும்.
  2. இரண்டாம் நாள் ஒரு பாத்திரத்தில் பால் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
  3. இறுதி நாளான மூன்றாவது தினத்தில் நைவேத்தியம் செய்து உச்சி நேர பொழுதுக்கு முன் நீரில் விநாயகர் திருவுருவ சிலையை விட்டு விட வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்