Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 10: பாபாவின் உயிர் பிரிந்ததாக எண்ணிய ஷீரடி மக்கள்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

Gowthami Subramani August 17, 2022 & 18:40 [IST]
Sai Baba History in Tamil Part 10: பாபாவின் உயிர் பிரிந்ததாக எண்ணிய ஷீரடி மக்கள்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?Representative Image.

Sai Baba History in Tamil Part 9: சென்ற வாரம், கோதுமையைப் பயன்படுத்தி, காலரா நோயிலிருந்து ஷீரடி மக்களைக் காப்பாற்றிய அதிசயங்களைப் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில், தன்னைக் காண வந்த பூசாரிக்கு சாய்பாபா செய்த அற்புதம் பற்றி காண்போம்.


Representative Image. Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?


சாய்பாபாவிற்கு நெருக்கமானவர்

சாய்பாபாவுக்கு மகசஸ்பதி என்ற கோயில் பூசாரி மிகவும் நெருக்கமானவர் ஆவார். இருவரும் ஒரே துணியைப் பயன்படுத்தி உறங்கிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தனர். இந்த மகசஸ்பதி பூசாரி, சாய்பாபாவின் நெற்றியிலும், கழுத்திலும் சந்தனம் இட்டு பஜனை செய்வார். இதை பாபா விரும்பி ஏற்றுக் கொண்டார். மேலும், இவர் சாய்பாபாவுக்கு மாலை போட்டு வணங்குவார். ஆனால், இவருக்குக் கொடுத்த இந்த அனுமதியை வேறு யாருக்கும் கொடுத்ததில்லையாம்.

மகன் இறந்த சம்பவம்

மகசஸ்பதிக்கு அவரது மகன் என்றால் மிகவும் பிரியம். இவருடைய மகன் ஒரு நாள் இறந்து போய் விட்டான். மகன் இறந்த துயரம் தாங்காத மகசஸ்பதி சாய்பாபாவிடம் சென்று கதறி அழுதான். சாய்பாபா, “ஏன் அழுகிறாய்? அவன் எங்கே போய் விட்டான்? என்னிடம் தானே வந்திருக்கிறான்? பொறுத்துப் பார்” என்று கூறினார்.

அதே போல, அடுத்த ஆண்டு அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி நிலவியது.


Representative Image. Sai Baba History in Tamil Part 8: பாபாவின் எளிமையான தோற்றத்திற்கு இது தான் காரணமா….?


உடலைப் பாதுகாத்து வைத்தல்

இந்த நிகழ்விற்குப் பிறகு, ஒரு நாள் சாய்பாபா மகசஸ்பதியை அழைத்து, “நான் கடவுளைக் காணப்போகிறேன். 3 நாள்கள் என்னுடைய உடலைப் பாதுகாத்து வை! உயிர் திரும்பவில்லை என்றால், அடக்கம் செய்து விடு” என்று கூறினார். அந்த சமயமே பாபா மூச்சை அடக்கி சலனம் இன்றி அடங்கிப் போனார். ஆனால், இது பற்றி அறியாத பொதுமக்கள், பாபாவின் உயிர் பிரிந்து விட்டதாக எண்ணி சாய்பாபாவை அடக்கம் செய்ய முற்பட்டார்கள்.

அந்த சமயத்தில், மகசஸ்பதி சாய்பாபா கூறியதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், சாய்பாபா மீண்டும் வருவார் என்றும், மூன்று நாள்களுக்கு இந்த உடலை யாரும் தொடக் கூடாது என்றும் கூறியுள்ளார் மகசஸ்பதி.

ஊராருக்கு நம்பிக்கை இல்லை

மகசஸ்பதி கூறியதற்கு ஊரார் எவரும் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். இருந்த போதிலும், மூன்று நாள்கள் காத்திருக்க ஒப்புக் கொண்டார்கள். மூன்று நாள்கள் முடிந்த தருவாயில், எல்லோரும் சாய்பாபாவின் எழுகைக்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில், சாய்பாபா உடல் அசைந்து மீண்டும் உயிர் பெற்று எழுந்து உட்கார்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பின், பக்தர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு, பாபா முப்பத்து இரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஆகும்.

இது மட்டும் அல்லாமல், இன்னும் ஏராளக்கணக்கான அற்புதங்களை சாய்பாபா நிகழ்த்தியிருக்கிறார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 7: சாய்பாபாவிடம் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்… நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கும்…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba History in Tamil | Sai Baba History in Tamil Part 10 | Shirdi Sai Baba History Tamil | Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Shirdi Sai Baba History | Original Sai Baba History | Sai Baba Viratham book in Tamil | Sai Baba Viratham Murai | Sai Baba Viratham Story in Tamil | Sai Baba Darshan timings | Sai Baba Vratham Procedure | Sai Baba Fasting Rules | Sai Baba Thursday Fast Procedure | Sai Baba Fasting Procedure | Shirdi Sai Baba Viratham Tamil | Sai Baba Thursday Fast Rules | Sai Baba How to pray | Sai Baba Vrat How to Do | Sai Baba Viratham Rules in Tamil | Sai Baba Fasting Rules in English | Sai Baba Fasting Rules | Sai Baba Fast Rules | Sai Baba Fasting Rules in Tamil | Sai Baba temple Darshan timings


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்