Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு முன் இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..

Gowthami Subramani August 23, 2023 & 17:40 [IST]
விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு முன் இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.. Representative Image.

முழு முதற்கடவுளாய் விளங்கும் விநாயகப் பெருமானைப் போற்றி சிறப்பிக்க விநாயகர் சதுர்த்தி தினத்தைக் கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி தினத்தில், விநாயகர் சிலை வைத்து, பூஜை வைத்து பிரசாதங்கள் படையலிட்டு, வழிபடுவர். இவ்வாறு மூன்று அல்லது ஐந்து நாள்கள் வழிபட்டு, விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் செல்வர்.

முன்னோர்களின் செயல்

நாம் தற்போது பாரம்பரியமாகக் கடைபிடித்து வரும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தனி காரணம் இருக்கும். அதை நம் முன்னோர்கள் எதாவது ஒரு காரணத்திற்காக நாம் கடைபிடிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்குக் கூறியுள்ளனர். நாம் வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவது முதல், இரவு தூங்கும் முன் நாம் வழக்கமாகச் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் காரணம் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியிலும் நாம் பற்பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். விநாயகர் சதுர்த்திக்கு முன்னரே நாம் சிலையை வைத்தாலும், சிலையின் கண்ணை மூடி வைத்திருப்பார்கள். அதாவது, விநாயகப் பெருமானின் கண்ணை, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பூஜையிட்டு, பிறகு கண் திறப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து, மூன்று நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் போன்ற ஒற்றைப் படை எண்களில் ஆறு இருக்கும் பகுதிக்கு சென்று விநாயகரை தண்ணீரில் விட்டு விடுவர். இதற்கு என்ன காரணம் இருக்கும் என இந்தப் பதிவில் காணலாம்.

விநாயகர் சிலையைக் கரைப்பதற்கான காரணம் என்ன?

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு, பக்தி ஒரு காரணமாக இருப்பினும், அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன.

நாம் முழு முதல் கடவுளாய் விளங்கும் விநாயகப் பெருமானின் சிலைகளைக் கடலில் கரைத்தால், நிலத்தடி நீர் வளம் பெருகும் என கூறப்படுகிறது.

இவ்வாறு நிலத்தடி நீர் வளம் பெருகி, ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்பதற்காகவே இந்த செயல் செய்யப்படுகிறது.

மேலும், ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து, ஆற்றில் உள்ள மணல் எல்லாம் அடித்துக் கொண்டு போய் விடும். இதனால், நிலத்தில் நீர் இறங்காமல் அந்த நீர் கடலுக்குச் சென்றடைந்து விடும்.

இதன் காரணமாகவே, ஆடி மாதத்திற்குப் பின் வரும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, களிமண் உள்ள இடத்தில் நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

இதன் காரணமாகவே, களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைத்து விட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நீர் வளத்தைப் பெருக்கும் நோக்கத்திலே, விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்து வருகிறோம்.

மூன்று நாள் அல்லது ஐந்து நாள்களில் விநாயகர் சிலையைக் கரைப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?

அதிலும் குறிப்பாக, மூன்று அல்லது ஐந்து நாள்களில் தான் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பார்கள். பொதுவாக, சிலை செய்யும் போது களிமண் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இவ்வாறு, களிமண் ஈரப்பதத்துடன் இருக்கும் போது, அது நிலத்தில் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்று விடும். இதனால், நன்றாக காயும் வரை காத்திருந்து, பிறகு மூன்று அல்லது ஐந்து நாள்களில் விநாயகர் சிலையைக் கரைக்கலாம் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்