Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹைட்ரோபோனிக்ஸின் வித்தை..! பெருமளவில் லாபம் தரும் மண்ணில்லா விவசாயம்..!

Gowthami Subramani July 25, 2022 & 17:56 [IST]
ஹைட்ரோபோனிக்ஸின் வித்தை..! பெருமளவில் லாபம் தரும் மண்ணில்லா விவசாயம்..! Representative Image.

Farming without Soil at Home in Tamil: சிறிய அளவில் வளரும் செடிகள் முதல், பெரிய மரங்கள் வரை நாம் வளர்ப்பதற்கு மூலப் பொருளாக தேவைப்படுவது மண், நீர், சூரிய ஒளி, காற்று போன்றவை. நாளுக்கு நாள், இந்த மூலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹைட்ரோபோனிக்ஸ் என்ற முறை மூலம் மண் இல்லாமல் விவசாயம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ்

ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண் இல்லாமல், செடியை இயற்கையாக வளர்க்க முடியும் என்பதாகும். இந்த முறையில் மண்ணில்லாமல் நேரடியாக நீர் மூலம் செடிகளை வளர்க்க முடியும். இதனை ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் முறை எனக் கூறலாம். இன்றைய நவீன உலகில் அனைவரும் மண்ணில்லா விவசாயத்தையே விரும்புகின்றனர். இந்தப் பதிவில், மண்ணில்லாமல் விவசாயம் அமைப்பது பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் காணலாம்.

மண்ணில்லா விவசாயம் அமைக்கத் தேவையானவை

PVC Pipe

Net Pots for Hydroponics

களிமண் உருண்டைகள் (Clay Pellets for Plants)

பசுமை குடில்

போதுமான அளவு தண்ணீர்

மண்ணில்லா விவசாயம் அமைக்கும் முறை

முதலில் ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்பதற்கு சிறந்த இடத்தைத் தேர்வு செய்து, அதில் பிவிசி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வைத்து வட்ட வடிவ துளைகளை இட வேண்டும்.

பின்னர், அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை அந்த துளைகளில் வைக்க வேண்டும்.

பிறகு, செடிகள் உறுதியாக நிற்பதற்கு களிமண் உருண்டைகளை அந்த பிளாஸ்டிக் கப்-ன் உட்பகுதியில் போட வேண்டும். களிமண்ணைப் பொறுத்த வரை, நீரினால் கரையாத தன்மையைக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், செடிகளுக்கு நீர் ஊற்றும் போது அதன் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

இந்த விவசாயத்தில் வேர் பகுதிக்கு, காற்று மற்றும் நீர் வழங்கப்படுகிறது. இதனைக் பார்ப்பதற்காக காற்று நிறைந்துள்ள பிவிசி பைப்களினுள் மிதந்த செடிகளின் வேர் பகுதி இருக்கும். இதனை ஏரோபோநிக்ஸ் முறை என கூறுவர்.

மண்ணில்லாத விவசாயம் அமைப்பதன் பயன்கள்

மண்ணைப் பயன்படுத்தி, விவசயம் அமைப்பதற்கும், மண் இல்லாமல் விவசாயம் அமைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மண் இல்லாமல் விவசாயம் செய்யப்படுவதன் பயன்கள் பற்றி இதில் காண்போம்.

நீர் தேவைப்படும் குறைத்துக் கொள்ளலாம்.

இந்த முறையில் பறக்ககூடிய பூச்சிகளைத் தடுக்க முடியும். இதன் மூலம், செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பதையும் தவிர்க்கலாம்.

இந்த செடிகள் மண்ணிலிருந்து 2 அல்லது 3 அடி உயரத்திலேயே இருக்கும். இதனால், மண் சார்ந்த பூச்சிகளால் பாதிப்படைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

மண்ணில்லா விவசாயத்தின் நிலைகள்

Seeding Stages

ஒரு சரியான இடத்தைத் தேர்வு செய்து, அதில் செடிகளை வளர்ப்பதற்கு 2 அல்லது 3 விதைகளைப் போட வேண்டும்.

இதிலிருந்து கிட்டத்தட்ட 60,000 செடிகள் வளரும் என கூறப்படுகிறது.

அந்தச் செடியில் எந்த விதை சரியாக வளர்கிறதோ அதை மட்டும் வைத்து விட்டு, மீதியை வெட்டிவிட்டு விடலாம். அதாவது இந்த மூன்று Seeding-ல் எது அதிக அளவிலான நல்ல செடியைத் தருகிறதோ அதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

Grading

இந்த முறையில் செடிகள் கப்-ல் வளர்த்தப்படுவதால் அதனை 10 முதல் 15 நாள்களுக்கேற்ப நகர்த்திக் கொண்டே வர வேண்டும்.

இந்த நிலையில், எதாவது மாற்ற வேண்டும் என்றால், மாற்றம் செய்து அதனை மூன்றாவது நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

இது பார்ப்பதற்கு அழகாகவும், அதிக லாபம் ஈட்டலாம் எனவும் கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Farming Without Soil in Tamil | Aeroponic Farming in Tamil | Hydroponic Farming in Tamilnadu | Hydroponics Setup Cost in Tamilnadu | Aquaponics Farming in Tamil | Aeroponics in Tamil | Subsidy for Hydroponics in Tamil nadu | Hydroponics in Tamil PDF | Farming Without Soil in India | 5 Methods of Growing Plants Without Soil | Hydroponic Farming at Home | Hydroponic Farming at Home in india | Hydroponic Farming at Home kit | Hydroponic Farming at Home for beginners | Hydroponic Farming at Home cost in India | Hydroponic Farming at Home Cost | How to start Hydroponic Farming at Home | How to do Hydroponic Farming at Home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்