Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Grow Mint Leaves at Home in Tamil: ஈஸியான முறையில் வீட்டிலேயே புதினா செடியை வளர்க்கலாம்..! இந்த மாதிரி பண்ணுங்க.. 10 நாள்களில் புதினா படர்ந்து வரும்..!

Gowthami Subramani [IST]
How to Grow Mint Leaves at Home in Tamil: ஈஸியான முறையில் வீட்டிலேயே புதினா செடியை வளர்க்கலாம்..! இந்த மாதிரி பண்ணுங்க.. 10 நாள்களில் புதினா படர்ந்து வரும்..!Representative Image.

How to Grow Mint Leaves at Home in Tamil: நம் வீட்டிலேயே புதினா செடியை வளர்க்கும் முறைகளைப் பற்றி இந்த பகுதியில் காண்போம்.

புதினா செடி வளர்க்க போதுமான அளவு இடம் இருந்தால் போதுமானது. இதற்கு பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், சிறிய அளவிலான இடம் வைத்திருப்பவர்கள் புதினா செடியை வீட்டிலேயே வளர்க்கலாம் (How to Grow Mint at Home From Seeds). மேலும், இதனை வளர்ப்பதற்கு தேவையான மூலமும் நமக்கு எளிதாக கிடைத்து விடும். இதில், புதினா செடி வளர்க்கும் முறைகளையும், அதற்குத் தேவையானவற்றையும் பற்றி காண்போம் (How to Grow Mint Leaves at Home in Tamil).

வீட்டுத் தோட்டம்

தற்போது, சுத்தமான உணவுப் பொருள்களை விரும்பி, எல்லோரும் வீட்டிலேயே காய்கறி மற்றும் மற்ற உணவுப் பொருள்களை வளர்ப்பதற்குத் தயாராகி விட்டனர். ஆனால், அதனை வளர்ப்பதற்கான பொதுவான வழிமுறைகள் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு நம் வீட்டுத் தோட்டத்திலேயே புதினா செடியை வளர்க்க முடியும். இதன் மூலம், நாம் எளிமையான முறையில் வீட்டுப்பராமரிப்பிலேயே புதினா செடிகளை வளர்க்கலாம் (How to Grow Mint Indoors).

புதினா செடி வைக்கத் தேவையானது

வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என சில பேர் நினைப்பர். அவர்கள் முதலில் சிறு சிறு செடிகளை வைத்து வளர்த்துப் பராமரித்து வருவதன் மூலம், செடிகளை வளர்ப்பதற்கான முறையான பராமரிப்புகளைச் செய்து வருவர். அதே சமயம் அதிக செலவு செய்தலும் இருத்தல் கூடாது என நினைப்பர். அந்த வகையில், முதலில் இருப்பது புதினா செடியே ஆகும். இதனை, வீட்டு ஜன்னல்களில் வைத்து கூட நாம் எளிமையாக வளர்க்க முடியும். மேலும், இதனை விரைவாக அதாவது 15 நாள்களுக்கு அறுவடை செய்யவும் முடியும். வீட்டில் புதினா செடி வளர்ப்பதற்கு, நாம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் புதினா இலைகளைப் பயன்படுத்திக் கொண்டு, மீதமிருக்கும் தண்டு ஒன்றே போதும். இதனை வைத்தே புதினாவை அருமையான முறையில் பராமரித்து வளர்க்கலாம் (How to Grow Mint at Home From Cuttings).

புதினா வளர்ப்பதற்கான வழிமுறைகள் (Mint Plant Care Indoor)

படி 1

முதலில், புதினா இலைகளை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு மீதமுள்ள தண்டை எடுத்துக்கொள்ளவும். மேலும், அது தரமான மற்றும் தடினமான, குறைந்தபட்சம் இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, இலைகளை நீக்கும் போது அனைத்து இலைகளையும் நீக்க கூடாது. அவற்றில் இரண்டு இலைகளை விட்டு வைக்க வேண்டும்.

படி 2

ஒரு கண்ணாடி டம்ளர் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் பாதியளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் எடுத்து வைத்திருக்கும் புதினா தண்டுகளை வைக்க வேண்டும் (How to Grow Mint at Home in Water). மேலும், டம்ளரில் நீரை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். முக்கியமாக, புதினா வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரை வெயிலில் வைக்கக் கூடாது.

படி 3

இவ்வாறு கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கக்கூடிய புதினா தண்டுகள் 5 நாள்களுக்குப் பின, வேர் விடும். இவ்வாறு வேர் விடும் சமயத்தில், மேலே இருந்த இரண்டு இலைகளுடன் கூட இன்னும் சில இலைகளும் வளர ஆரம்பிக்கும் (Growing Mint in Pots).

படி 4

இந்த சமயத்தில் டம்ளரில் இருந்து புதினா தண்டை எடுத்து, மண்ணில் நட வேண்டும். இவ்வாறு வேர் விட்ட பின், மண்ணில் நடும் போது, செடி நன்றாக வளர ஆரம்பித்து விடும்.

படி 5

புதினா படர்ந்து வரக்கூடிய செடியாகும். எனவே, இதனை குறுகிய தொட்டிகளிலோ அல்லது பைகளிலோ வைத்து வளர்க்க வேண்டும். அகலமான தொட்டி அல்லது குரோ பேக்குகளில் வளர்த்தலாம் (Benefits of Growing Mint Indoors).

உரப்பொருள்கள்

இவ்வாறு தொட்டி அல்லது குரோ பேக்கில் மண் கலவையை வளர்த்தும் போது 40% அளவு செம்மண், 39% அளவு தேங்காய் நார் கழிவுகள் மற்றும் 30% மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து தயாரித்திருந்த மண்கலவையாக இருக்க வேண்டும்.

மேலும், இப்படி தயாரிக்கப்பட்ட மண் கலவையில் விரல்களால் குழி பறித்து அதில் புதினா தண்டுகளை நட வேண்டும்.

பின், இந்த புதினா தண்டு நட்ட தொட்டியை சூரிய ஒளிபடும் படி வைக்கக் கூடாது. இருந்த போதிலும், புதினா செடி வளர்ப்புக்கு சூரிய ஒளி தேவை. எனவே, அதற்கு ஏற்றார் போல புதினா செடி இருக்கும் டம்ளர் அல்லது தொட்டி அல்லது குரோம் பேக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், வெறும் 10 நாள்களில் புதினா செடி வளர்ந்து விடும் (How Long Does Mint Take to Grow). புதினா செடி படர்ந்து காணப்படுவதன் காரணமாக கீழிலிருக்கும் இலைகளுக்கும் சூரிய ஒளி தேவைப்படும். அதன் பின், இந்த செடிக்கு மேல் இருக்கும் இலைகளை எடுத்துக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Mint Leaves at Home in Tamil | How to Grow Puthina Chedi at Home in Tamil | How to Grow Pudina at Home From Stem | How to Grow Pudina at Home in Water | How to Grow Pudina at Home With Seeds | How to Grow Pudina in Bottle | How to Grow Pudina With Stem | How to Grow Pudina Plant From Stem | How to Grow Mint From Stem at Home | Can Pudina Grow From Stem


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்