Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Free Heli Tourisms for Farmers: “கையிலே ஆகாசம்… கொண்டு வந்த உன் பாசம்…” -ஹெலிகாப்டரில் இலவச பயணம்…! மிகுந்த உற்சாகத்தில் விவசாயிகள்…!

Gowthami Subramani June 06, 2022 & 17:35 [IST]
Free Heli Tourisms for Farmers: “கையிலே ஆகாசம்… கொண்டு வந்த உன் பாசம்…” -ஹெலிகாப்டரில் இலவச பயணம்…! மிகுந்த உற்சாகத்தில் விவசாயிகள்…!Representative Image.

Free Heli Tourisms for Farmers: ஹெலிகாப்டரில் போக யாருக்குத் தான் ஆசை இருக்காது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, பணக்காரர் முதல் ஏழை எளியோர் வரை அனைவருமே ஹெலிகாப்டரில் பயணம் செய்ய விரும்புவர். இன்றளவும், யாருக்கு ஆசை இருக்கிறதோ இல்லையோ..? விவசாயிகளுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர். அந்த வகையில், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில், விவசாயிகளுக்கு இரண்டு நாள்கள் பயணமாக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.

ஃப்ரீ ஹெலி டூரிசம் (Free Heli Tourism for Farmers in Tamil)

கர்நாடக சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஹெலி டூரிசம் (Heli Tourism for Farmers in Tamil) ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்ப்பவர்கள் போன்றோர் ஹெலிகாப்டரில் இலவசமாகப் பயணம் செய்தனர்.

வாழ்நாள் முழுவதும் ஒரு கனவாகவேப் போய்விடுமோ என்று நினைத்த விவசாயிகளுக்கு, இந்த அற்புதமான ஹெலி டூரிசம் ஒரு சிறப்பான நெகிழ்வை ஏற்படுத்தியது (Helipcopter Free Ticket for Farmers in India).

ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி

ஹெலி டூரிசம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் ஒசதுர்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டூரிசம் தொடங்கிய முதல் 2 நாள்களுக்கு விவசாயிகளுக்கும், ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கும் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் அளிக்கப்பட்டது. அதன் படி, நேற்று அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் இலவசமாக ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இரண்டு நாள்கள் அனுமதி

ஹெலிகாப்டரில் சென்ற விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். அவர்கள், ஹெலிகாப்டரில் இருந்தபடியே, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை கண்டு மகிழ்ந்தனர். இந்த ஹெலி டூரிசம் நேற்று மற்றும் இன்று அதாவது ஜூன் 05, மற்றும் ஜூன் 6 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்த ஹெலி டூரிசம் இரண்டு நாள்கள் என்பதால், இரண்டாவது நாளான இன்றும் ஏராளக்கணக்கானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர் (Helipcopter Free Ticket for Farmers in Tamilnadu).

இந்த இரு நாள்களிலும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்த இந்த ஹெலி பயணம் காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஹெலிரெடு நடத்தப்பட்டது.

ஹெலிகாப்டர் பயணத்துடன் படகு சவாரி

இந்த அற்புதமான திட்டத்தில் இருநாள்களும் நடந்த ஹெலிகாப்டர் பயணத்தில், சுமார் 200 விவசாயிகள் இலவசமாகப் பறந்து சென்றனர் (Helipcopter Free Ticket for Farmers Online).

இதே போல, வாணிவிலாஸ் அணைக்கட்டில், படகு சவாரியும் இலவசமாக நடத்தப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ கூலிகட்டி சேகர் அவர்கள் செய்திருந்தார். இந்த ஹெலி டூரிசம், இதனைத் தொடர்ந்து வரும் நாள்களில், சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டணத்துடன் கூடிய ஹெலிரைடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“கன்னத்துல கைய வச்சு…
காத்திருந்த சனகளும்தான்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…”

இந்தப் பாடல் வரிகளைக் கேட்டாலே, எல்லோர்க்கும் முதலில் நினைவுக்கு வருவது 1 ரூபாயில் சாதாரண மக்களும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து மகிழ்ச்சியடைவர். இந்த சூரறைப் போற்று படத்தில் வரும் காட்சிகளைப் போலவே நிஜத்தில் நடந்தது விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்