Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in TamilRepresentative Image.

நம்மில் பலருக்கும் பழங்களில் மிகவும் பிடித்தது வாழைப்பழம். ஏனென்றால், இதன் ஒருவிதமான இனிப்பு சுவை ஒரு பக்கம் இருந்தாலும் அதன் நன்மைகள் பல பல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் வளைத்து வைத்திருக்கும் இந்த வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. 

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in TamilRepresentative Image

உலகில் பல்வேறு இடங்களில் விளையும் இந்த வாழைப்பழம் ஒவ்வொரு பருவ சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் வாழைப்பழத்திற்கு டிமெண்ட் என்றே சொல்லலாம். இந்த நிலையில், உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் 'Giant Highland Banana' பப்புவா நியூகினியா எனும் நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான வாழைப்பழங்கள் அனைத்தும் காட்டு வாழைப்பழங்களின் வகைகளை சார்ந்தவை. இது உண்மையில் இயற்கையின் அதியம் என்றே சொல்ல வேண்டும். 

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in TamilRepresentative Image

மூசா இன்ஜென்ஸ் வாழைப்பழத்தின் சிறப்பு:

பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் வாழைப்பழத்தின் மரத்தை மூசா இன்ஜென்ஸ் [Musa Ingens] என்று அழைப்பார்களாம். இந்த மரங்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும், பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது. 

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in TamilRepresentative Image

அதாவது, ஒரு வாழை மரம் 15 லிருந்து 30 மீட்டர் வரை வளர்கிறதாம். பொதுவாக வாழை இலை என்றாலே பெரியதாக தான் இருக்கும். ஆனால், இந்த வாழை மரத்தின் இலைகள் 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் இருக்குமாம். இந்த ஒரு வாழைப்பழம் இருந்தால் ஒரு குடும்பமே சாப்பிடலாம். மேலும், இந்த வாழைப்பழங்களை நாம் சாப்பிடுவதற்கு 3 லிருந்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒரு வாழைப்பழத்தோட எடை சுமார் 6 கிலோ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம்.. ஒரு பழத்தோட எடை எவ்வளவு தெரியுமா? | World's Biggest Banana in TamilRepresentative Image

காலநிலை:

இந்த வாழை மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் வராது. மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியாகவும், இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலையில் தான் வளரும். இதனால் தான், இந்த வாழை மரங்கள் அந்த நாட்டில் மட்டும் அதிகமாக விளைகிறது. எனவே, இதுபோன்ற வாழை மரங்களில் இருந்து சாகுபடி செய்வது மிகவும் கடினம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்