Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் முதல் தனியார் நிறுவனம் - பயனுள்ள தகவல்!

Abhinesh A.R Updated:
கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் முதல் தனியார் நிறுவனம் - பயனுள்ள தகவல்!Representative Image.

Cow Insurance பால் சந்தை இணைப்பு பிரிவான mooMark, பால் உற்பத்தியைப் பெருக்குவதில் முக்கிய சக்தியாக விளங்குகிறது. 1600க்கும் மேற்பட்ட இந்திய கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இடமிருந்து தினமும் 2.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஸ்டெல்லாப்பிஸின் (Stellapps) நிதி பிரிவான மூபே, IBISA நெட்வொர்க், எச்டிஎஃப்சி எர்கோ, கிராம்கவர் (Gramcover) ஆகியவற்றுடன் இணைந்து வெப்பக் குறியீட்டு அடிப்படையில் விவசாயிகளுக்கு புதுமையான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கோடை கால வெப்ப அலைகளின் போது குறைந்த பால் உற்பத்தித் திறனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மண்டல அளவிலான அளவீடுகளைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் 60 நாள்களுக்கு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவை விட வெப்பநிலை குறிப்பிடப்பட்டுள்ள வரம்பை மீறி இருந்தால், விவசாயிகளுக்கு இந்த காப்பீடு உதவியாக இருக்கும்.

இதற்காக விவசாயிகள் கோரிக்கை செய்யும் நடைமுறைகளும் எளிமையானது ஆகும். காப்பீட்டாளர்கள் முன்னர் காப்பீடு செய்யப்பட்ட பொது தரவுதளத்தில் இருந்து கிடைக்கும் தரவைப் பயன்படுத்துகின்றனர். தற்போது காப்பீடு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடைக்கும் 2000 ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.

தொடக்கத்தில், இந்த காப்பீடு நான்கு மாநிலங்களில் உள்ள 5 மாவட்டங்களில் சுமார் 7000 விவசாயிகளை உள்ளடக்கியதாக தொடங்கப்பட்டது. இவற்றின் மொத்த காப்பீட்டுத் தொகையின் அளவு 1.3 கோடி ரூபாயை தொடும் என நிறுவனம் கூறுகிறது.

இத்திட்டம் கிராம அளவிலான சேகரிப்பு மையங்கள் மற்றும் ஸ்டெல்லாப்ஸ் செயலிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. சுமார் 300 மில்லியன் கால்நடைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வருமானத்தை நம்பியுள்ள 80 மில்லியனுக்கும் அதிகமான பால் விவசாய குடும்பங்களுக்கு இந்த மாபெரும் நிதி பயனுள்ளதாக இருக்கும்.

OMNIVOR நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளியான ஜினேஷ் ஷா, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான இந்த முயற்சி குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று பாராட்டியுள்ளார். இந்தத் திட்டம் அவர்களுக்கு நிதி ஆதரவு அளிப்பது, திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால வேளாண் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும் கூறினார்.

மூபேயின் தலைமை நிர்வாக அலுவலர் ராகுல் மல்லிக், கிராமப்புற நுகர்வோருக்கு பொருட்களை உற்பத்தி செய்ய நிதி ஆதாரம் வழங்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். கடும் வெயிலில் கறவை மாடுகள் எதிர்கொள்ளும் அழுத்தத்தினால் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் வெப்ப குறியீட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் இது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதால் இதர காப்பீட்டுத் திட்டங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்