Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்; விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! 

KANIMOZHI Updated:
திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்; விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! Representative Image.

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் மற்றும் வாழையை நாசம் செய்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த காட்டு யானைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியான பதிமடுகு மற்றும் கட்டாயம்பேடு  வனப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கட்டாயம் பேடு கிராமத்தில் ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்து பயிற்களை நாசம் செய்துள்ளது. 

 கட்டாயம் பேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும்,  தக்காளி தோட்டங்கள் மற்றும் முட்டைக்கோஸ் தோட்டங்களை தின்றும் மிதித்தும் காட்டு யானைகள் நாசம் செய்துள்ளது. 

காலையில் வந்து தோட்டத்தை பார்த்து விவசாய வெங்கடேசன் யானைகள் தோட்டத்தை நாசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததில் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த 3 யானைகளை காட்டு பகுதிக்கு விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்