Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம்..!

Bala April 26, 2022 & 16:19 [IST]
மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம்..!Representative Image.

இந்தியாவின் மூலிகை தேவை பற்றாக்குறையை போக்க மத்திய அரசு மூலிகை சாகுபடிக்கு மானியத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மூலிகை தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. தேவையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் மூலிகை உற்பத்தியில் தன்னிறைவு என்ற அடிப்படையில் மூலிகை சாகுபடி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு மூலிகை தாவர வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது. 

மானியம் வழங்கப்படும் மூலிகை வகைகள்:-

வசம்பு - 20%, சோற்றுக்கற்றாழை-20%, பேரரத்தை - 20%
சித்தரத்தை -20%, தண்ணீர்விட்டான் கிழங்கு - 20%,வேம்பு - 20%
நீர் பிரம்மி - 20%, சாரணத்தி - 20%, சென்னா (அ) அவுரி - 20%, நித்திய கல்யாணி - 20%
வல்லாரை -20%, சங்குபுஸ்பம் -20%, மாகாளி - 20%, வாவிலங்கம் -20%
நெல்லி -20%, சிறுகுறிஞ்சான் - 20%, நன்னாரி -20%, கச்சோலம் -20%, 
பூனைக்காலி -20%, துளசி-20%, கீழாநெல்லி -20%, திப்பிலி -20%,செங்கொடிவேலி-20%
குறுந்தொட்டி-20%, மணத்தக்காளி-20%,சீனித்துளசி-20%,நீர்மருது-20%
தான்றி-20%, கடுக்காய்-20%,சீந்தில் -20%, நொச்சி-20%, வெட்டிவேர்-20%
அமுக்கிரா-20%, வில்வம்-50%, வாகை-50%, மாவிலங்கம்-50%
கண்வலிக்கிழங்கு- 50%, பாலா-50%, கொடிவேலி -50%, வேங்கை-50%
நஞ்சறுப்பான்-50%, சந்தன வேங்கை - 75%,சந்தனம் - 75%

கவனத்தில் கொள்ள வேண்டியவை:-

* சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டும் பயிர் செய்ய வேண்டும்.

*பயிர் செய்வதற்கு முன் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. 

*இடவசதி மற்றும் நீர் வசதிக்கேற்ப பயிர் செய்தல் வேண்டும்

*மாணியம் தொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அனுகலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்