Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?

Nandhinipriya Ganeshan Updated:
How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?Representative Image.

விவசாயிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கி இரண்டு வகையான தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 1. பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன், 2. பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஏராளமான நன்மைகளை பெற முடியும். 

பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன் திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 7% வட்டி விதிக்கப்படுகிறது. அடுத்து, ரூ. 3 லட்சத்திற்கு மேல் வாங்கும் விவசாய கடனிற்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூல் செய்யப்படும். அதுவே, பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன் திட்டத்தில் வாங்கும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூலிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், மற்ற கடன்களை வாங்குவதில் இருக்கும் சிரமம் இந்த கடன் வாங்குவதில் இருக்காது. விவசாயிகள் மிகவும் எளிமையான முறையில் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல், வங்கியில் மறைமுகமாக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. கடன் தொகையினை திரும்ப செலுத்துவதில், விவசாயிகளின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பல்வேறு சலுகைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பு: இங்கு, தங்கக் கட்டிகள் மீது நகைக் கடன் வழங்கப்படாது. இருப்பினும், 50 கிராம் வரையில் தங்க நாணயங்கள் மீது கடன் வழங்கப்படுகிறது. 

How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?Representative Image

நிபந்தனை:

  • எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ல விவசாய தங்க நகைக் கடன் திட்டத்தில் கடன் பெற நினைக்கும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தின் ஆவண நகலை வங்கியில் க்டன் வாங்கும்போது ஒப்படைக்க வேண்டும்.
  • நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்ய தேவைப்படும் தொகையினை வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.

யாருக்கு இந்த கடன் வழங்கப்படும்?

  • சொந்த மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு.
  • மீன், இறைச்சி, பால் மற்றும் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கும் சுயதொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தங்களின் திட்டம் சார்ந்த செயல்பாடுகலை நடைமுறைப்படுத்த முதலீடு தேவைப்படுபவர்களுக்கு.
  • நிதி அல்லாத நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட கடன் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த விரும்பும் எந்தவொரு விவசாயிகளுக்கும்.
  • RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி, விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த கடன் வழங்கப்படுகிறது. 

கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்:

  • 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள்
  • அடையாளச் சான்றாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒப்படைக்க வேண்டும்.
  • அடுத்ததாக முகவரி சான்றாக வாக்காளர் ஐடி, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஏதேனும் ஒன்று.
  • விவசாயம் செய்வதற்கான சான்று நில விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும். 
  • பயிர்களை பயிரிடுவதற்கு அல்லது தொடர்புடைய பொருட்களை வாங்குவதற்கான ஆதாரம். 
How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?Representative Image

எஸ்.பி.ஐ வங்கி விவசாய தங்கநகை கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • இந்த திட்டத்தின் கீழ் கடனை பெற நினைக்கும் விவசாயில் அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கி கிளையை அணுகவும்.
  • பின்னர், வங்கி அதிகாரியிடமிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டதும் வங்கி லோனை பெறுவதற்கான வழிமுறையினையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். 
  • அடுத்தது, யோனா செயலியின் மூலமும் விவசாயிகள் அனைவரும் தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், sbi.co.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

யோனா செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில், யோனோ செயலியை டவுன்லோடு செய்துக் கொள்ளவும். MPIN/இணைய வங்கி ஐடி & பாஸ்வேர்டை (internet banking user id & password) உள்ளிட்டு உள்நுழையவும் (login).
  • அதன் பிறகு, யோனா கிரிஷ் என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின்னர், அக்ரி கோல்டு லோன் என்பதை க்ளிக் செய்யவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடன் விவரங்களை பதிவிடவும். அவ்வளவு தான். 
  • தங்க ஆபரணங்கள் மற்றும் ஆவணங்களுடன் அருகில் இருக்கும் கிளைக்கு சென்று, கடனை பெற்றுக் கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை