Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…

Gowthami Subramani Updated:
ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image.

இயற்கையான முறையில் நம் மாடித் தோட்டத்திலேயே, ப்ரோக்கோலியை வீட்டில் நன்றாக வளர்க்க முடியும். மாடித் தோட்டத்தில் ப்ரோக்கோலி வளர்க்கும் முறைகளையும், அதற்கான சில குறிப்புகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

ப்ரோக்கோலி

உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களால் விரும்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் சத்தான காய்கறி ப்ரோக்கோலி ஆகும். இது சாலட்களில் பொதுவான மூலப் பொருளாகும். இதனை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். முட்டைகோஸ், காலிஃபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறியாகவும், நார்ச்சத்து மிகுந்ததாகவும் இருப்பது ப்ரோக்கோலி ஆகும். இதில் உள்ள ஊட்டச்சத்து சக்தியை வைத்து இதனை சூப்பர் ஃபுட் என்றே கூறலாம்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

ப்ரோக்கோலி வளரும் காலநிலை

ப்ரோக்கோலியானது, குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்றாக வளரக் கூடியதாகும். எனவே, இது குளிர்காலத்தில் நன்றாக வளரக் கூடியதாக அமைகிறது.

பொதுவாக எந்த தட்ப வெப்பநிலையிலும், எல்லா சீசனிலும், ப்ரோக்கோலியை எளிதில் வளர்த்த முடியும். இருப்பினும், மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் முழு முயற்சியுடன் வளர்த்த வேண்டும். அதாவது, இது அதிக வெப்பம் அல்லது சூரிய ஒளி இருக்கும் இடத்தில் இல்லாதவாறும், போதுமான தண்ணீரைப் பெற்று வளர்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

வீட்டில் இயற்கை முறையில் ப்ரோக்கோலி வளர்க்கும் முறை

நம் வீட்டின் மாடித் தோட்டத்திலேயே, இயற்கையான முறையில் ப்ரோக்கோலியை எளிதாக வளர்க்கலாம். அதற்கான சில குறிப்புகளை இங்கு காண்போம்.

விதைகள் அல்லது மரக்கன்றுகளை விதைத்தல்

ப்ரோக்கோலி வளர்ப்பதற்கு அதன் விதைகள் அல்லது மரக்கன்றுகளைப் பயன்படுத்தலாம். விதைகளைப் பயன்படுத்தும் போது, அதனை ஒரு விதைத் தட்டில் அல்லது தொட்டியில் விதைக்கலாம். இதுவே, மரக்கன்றுகளைப் பயன்படுத்தும் போது, அவற்றை முளைக்க விட வேண்டும். இதன் மூலம், விதைகள் முளைக்கும் விகிதம் அதிகரிப்பதைக் காணலாம். இது வலுவான நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது. மண் வறண்ட நிலையிலோ, அதிக ஈரமாகவோ இருந்தால் நாற்றுகள் நன்றாக வளராது. எனவே, மண்ணை சரியான பதத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு விதைகள் ஆரோக்கியமாக முளைத்த பிறகு, அவற்றை நேரடியாக மண்ணில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், சூடோமோனாஸ் திரவத்தில், நாற்றுகள் அல்லது மரக்கன்றுகளை நடுவதற்கு முன், வேர்களை 30 நிமிடங்கள் நனைக்கலாம். இது அழுகுவதற்கான வாய்ப்புடைய வேர்களை வலுப்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

பாட்டிங் கலவையை தயார் செய்தல்

மண்ணிற்கு ஊட்டச்சத்து நிறைந்தவற்றை தருவது மிக முக்கியம் ஆகும். அதன் படி, பாட்டிங் கலவையைத் தயார் செய்து மண்ணிற்கு உரமாக அளிக்கலாம். இதில், சுண்ணாம்புடன் மண்ணைக் கலந்து, ஒரு வாரம் வரை மண் கலவையை உலர வைக்க வேண்டும். மேலும், ஒரு க்ரோ பேக்கிற்கு 5 கிராம் சுண்ணாம்பு வீதம் எடுத்துக் கொள்ளலாம். சூரிய ஒளியில் இந்த மண் கலவையை நன்றாக உலர்த்தி, பின் அதில் மாட்டுச் சாணத் தூள் அல்லது உரம் சேர்த்து சிறிது கோகோ பீட் சேர்த்துக் கொள்ளலாம். மரக்கன்று அல்லது நாற்றுகளை நடுவதற்கு முன்பு, ஒவ்வொரு க்ரோ பேக்கிற்கும், ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பிண்ணாக்கு மற்றும் எலும்பு மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

தாவரத்தின் வளர்ச்சி

ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை வளர்க்கும் போது, அதன் முக்கியமான படி தாவரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரக் கூடிய பையை நிரப்புவதாகும். ப்ரோக்கோலி வளர்ப்புப் பையில், கால் பங்கு அளவிலான மண் கலவையை நிரப்பி, அதில் மரக்கன்று / நாற்றுகளை நட வேண்டும். அதன் பின், செடி வளரும் போது குரோ பேக்கில் மண்ணைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, தாவரம் வளர்வதை விரைவுபடுத்துவதுடன், பெரிய ப்ரோக்கோலியும் உருவாவதற்கு உதவும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

மிதமான சூரிய ஒளி

பொதுவாக, குளிர் காலநிலையில் ப்ரோக்கோலி நன்றாக வளரக் கூடிய தன்மையைக் கொண்டது. எனவே, இதனை அதிக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்காமல், மிதமான சூரிய ஒளியில் தாவரத்தை வளர்க்கலாம். அதாவது 50% வரை சூரியஒளியில் வளர்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. கேரளா போன்ற மிதமான காலநிலை உள்ள பகுதிகளில் ப்ரோக்கோலி நன்றாக வளரும். இருப்பினும், செடியின் வளர்ச்சியையும், அதன் விளைச்சலையும் உறுதிபடுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் அவசியம் ஆகும். அதன் படி, ஒரு நாளைக்கு இரு முறை தண்ணீர் விடலாம்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

கரிம உரங்களைச் சேர்த்தல்

மரக்கன்றுகளை நட்ட பின், மண்ணை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் விடாமலும் பார்த்துக் கொள்வது அவசியமாகும். மரக் கன்றுகளை நட்ட உடனே உரம் சேர்க்க வேண்டியதில்லை. மண் வளத்திற்கு ஏற்றவாறு அதன் வளர்ச்சியை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு மண்ணில், மரக்கன்றுகளை வைத்து, அதனுடன் பயோ-ஸ்லரிகள் உள்ளிட்ட ஆர்கானிக் உள்ளீடுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…Representative Image

பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல்

ப்ரோக்கோலியானது பூச்சிகளால் பாதிக்கப்படக் கூடியதாக அமையும். இதனைத் தடுக்க கரிம பூச்சிக் கொல்லிகளை தயாரிக்க வேண்டும். அதாவது, 100கி வேப்பம் பிண்ணாக்கை எடுத்து அதனை 3 முதல் 4 லிட்டர் வரையிலான தண்ணீரில் கலக்க வேண்டும். பின், 2-3 பூண்டுகளை அரைத்து, ஒரு இரவு அதாவது குறைந்தது 12 மணி நேரம் மிக்ஸியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கலவையை வடிகட்டி அதனை செடிகள் மீது தெளித்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி, செடிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம், நடவு செய்த 60 நாள்களில் அறுவடை செய்து கொள்ளலாம். மேலும், இந்த ப்ரோக்கோலி தலை மட்டுமல்லாமல், இலைகளும் உண்ணக் கூடியதாக அமையும். மேலும், இது சத்துள்ள உணவுப் பொருளாகவும் அமைகிறது.

இந்த எளிமையான முறையைப் பயன்படுத்தி, ப்ரோக்கோலியை வீட்டிலேயே மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்