பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்வதையே அக்காலத்தில் பட்டங்களாக பிரித்து வைத்திருந்தனர். பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்தால் மட்டுமே பயிரின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும். உதாரணமாக், ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்களும், காய்கறி பயிர்களும் சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களுக்கு பழைய பயிரின் கழிவுகள் உரமாக பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரை தாக்குவது கிடையாது.
இப்படி, விவசாயத்தில் கைதேர்ந்தவர்களுக்கு என்ன பயிர் விதைக்க வேண்டும், அதை எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால், புதிதாக விவசாயம் செய்ய தொடங்கும் நபர்களுக்கு அந்த அளவிற்கு அனுபவம் இருக்காது அல்லவா? அந்த பிரச்சனையை போக்கவே இந்த பதிவு. இதில் 12 மாதங்களில் எந்த மாதிரியான பயிர்களை பயிர் செய்யலாம், அதை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம் என்பது பற்றிய முழுவிபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி [மார்கழி, தை]:
கத்தரிக்காய், மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு போன்றவற்றை பயிரிடலாம்.
பிப்ரவரி [தை, மாசி]:
அவரைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி, கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய் போன்றவற்றை பயிரிடலாம்.
மார்ச் [மாசி, பங்குனி]:
வெண்டைக்காய், பாகற்காய், தக்காளி, கொத்தவரை, கோவைக்காய், சூரியகாந்தி, பீர்க்கங்காய், கம்பு, நாட்டுச்சோளம், உளுந்து, கத்திரிக்காய், பருத்தி போன்றவற்றை பயிரிடலாம்.
ஏப்ரல் [பங்குனி, சித்திரை]:
செடி முருங்கை, கொத்தவரை, வெண்டைக்காய் போன்றவற்றை பயிர் செய்யலாம்.
மே [சித்திரை, வைகாசி]:
கத்தரிக்காய், செடி, கொத்தவரை, தக்காளி, செடி முருங்கை ஆகியவற்றை பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
ஜூன் [வைகாசி, ஆனி]:
கோவைக்காய், தக்காளி, கீரைகள், கத்தரிக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை பயிரிடலாம்.
ஜூலை [ஆனி, ஆடி]:
சுரைக்காய், பாகற்காய், தக்காளி, வெண்டைக்காய், முள்ளங்கி, கொத்தவரை, பூசணிக்காய், மிளகாய், பீர்க்கங்காய் போன்றவற்றை பயிரிடலாம்.
ஆகஸ்ட் [ஆடி, ஆவணி]:
வெண்டைக்காய், பாகற்காய், மிளகாய், சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி போன்றவற்றை பயிரிடலாம். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும்.
செப்டம்பர் [ஆவணி, புரட்டாசி]:
செடி முருங்கை, கீரைகள், பூசணிக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், கத்தரிக்காய் போன்றவற்றை பயிர் செய்யலாம்.
அக்டோபர் [புரட்டாசி, ஐப்பசி]:
கத்தரிக்காய், முள்ளங்கி, செடி முருங்கை போன்றவற்றை பயிரிடலாம்.
நவம்பர் [ஐப்பசி, கார்த்திகை]:
முள்ளங்கி, பூசணிக்காய், தக்காளி, கத்தரிக்காய், செடி முருங்கை போன்றவற்றை பயிரிடலாம்.
டிசம்பர் [கார்த்திகை, மார்கழி]:
பூசணிக்காய், மிளகாய், தக்காளி, சுரைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் போன்றவற்றை பயிரிடலாம்.
காய்கறி பெயர் - அறுவடை செய்யும் காலம்:
வெண்டைக்காய் - 40 நாட்கள்
தக்காளி - 70 நாட்கள்
கத்தரிக்காய் - 60 நாட்கள்
கேரட் - 90 நாட்கள்
முள்ளங்கி - 30 to 40 நாட்கள்
கொத்தவரை - 30 நாட்கள்
வெங்காயம் - 90 நாட்கள்
மிளகாய் - 60 நாட்கள்
வெந்தயக்கீரை - 30 நாட்கள்
கொத்தமல்லி - 40 to 50 நாட்கள்
அவரைக்காய் - 40 நாட்கள்
பூண்டு - 6 மாதம் (180 நாட்கள்)
பாகற்காய் - 40 நாட்கள்
பீர்க்கங்காய் - 40 நாட்கள்
சுரைக்காய் - 60 நாட்கள்
புடலங்காய் - 50 நாட்கள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…