Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுலபமாக வீட்டிலேயே ஜாதிமல்லி செடி வளர்க்கும் முறை…! கூடவே நல்ல வருமானமும் ஈட்டலாம்...

Gowthami Subramani August 29, 2022 & 18:00 [IST]
சுலபமாக வீட்டிலேயே ஜாதிமல்லி செடி வளர்க்கும் முறை…! கூடவே நல்ல வருமானமும் ஈட்டலாம்...Representative Image.

பொதுவாக மலர்கள், பழங்கள், காய்கறிகள் என பெரும்பாலானவற்றை இயற்கை விவசாயம் செய்து அதன் மூலமாக அனைவரும் பெறுகின்றனர். சிலர் மாடித் தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையானவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வீட்டிலேயே எளிமையாக ஜாதிமல்லி செடிகள் வளர்க்கும் முறைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

ஜாதிமல்லி செடி

பெண்கள் அதிகம் விரும்பும் பூச்செடிகளில் ஒன்றாக விளங்குவது ஜாதிமல்லி செடியாகும். சில காலநிலை மாற்றத்தின் காரணமாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் ஜாதிமல்லி பூக்கள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும், இது அதிகளவில் பெண்களால் விரும்பப்படுவதால், அதிக விலை கொடுத்தாவது வாங்குகின்றனர். நீங்கள் விரும்பினால், உங்கள் வீட்டிலேயே அழகான ஜாதிமல்லி செடியை வளர்த்தி சாகுபடி செய்யலாம். இது உங்களுக்குப் பயனுள்ளதாகவும், நீங்கள் இதனை விற்பனை செய்து நல்ல வருமானமும் ஈட்டலாம்.

பொதுவாக செடியைப் பயிரிடுவதற்குத் சில முக்கியமானவை தேவைப்படுகின்றன.

மண், நீரிடுதல், ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவை செடி வளர்வதற்கு முக்கியமானவையாகும். அந்த வகையில், ஜாதிமல்லி செடி வளர்ப்பிற்குத் தேவையான மண், நீர் நிர்வாகம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை உள்ளிட்ட தகவல்களைப் பற்றி இதில் காண்போம்.

மண்

ஜாதிமல்லி செடி வளர்ப்பிற்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றதாகும். குறிப்பாக, களர், உவர் நிலங்கள் ஜாதிமல்லி செடி வளர்ப்பிற்கு உகந்ததாக இருக்காது.

செடி வளரும் பருவம்

ஒவ்வொரு செடி வளர்ப்பிற்கான சாகுபடிக்கும் ஒவ்வொரு காலம் உண்டு. அந்த வகையில், ஜாதிமல்லி செடி சாகுபடி பொதுவாக ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சாகுபடி செய்யப்படுகிறது.

நிலத்திற்கு உரமிடுதல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது கொள்ள வேண்டும். பின், 30 செ.மீ அளவிற்கு நீளம், அகலம் அளவிலான குழிகள் எடுத்து அதனை ஒரு மாதம் அப்படியே விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழி இருக்கும் இடத்திலும் 10 கிலோ அளவிற்கு நன்றாக மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.

ஜாதிமல்லி செடி பயிரிடுதல்

செடியில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை எடுத்துக் கொண்டு அதனை ஒரு கத்தி கொண்டு லேசாக மேல் பட்டையைச் சீவி நீக்க வேண்டும். பின்னர், அந்தத் தண்டினை வளைத்து, வெட்டிய பாகத்தை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு, புதைத்து வைத்த பின்னர் செடிக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

பிறகு, வெட்டப்பட்ட பகுதியில் இருந்து சல்லி வேர்கள் தோன்றும்.

இவ்வாறு 3 மாதங்கள் கழித்து, வேர்கள் சேதமடையாமல் மண்ணிலிருந்து எடுத்து பதியன்களிய நடவு செய்யலாம். இந்த ஜாதிமல்லி செடியைப் பொறுத்த வரை, வேர் முளைத்த பதியங்களை தனி செடியில் இருந்து பறித்ததும், தோண்டி வைத்த குழியின் மத்தியில் நட வேண்டும். அதுவும் குறிப்பாக, மழைக்காலங்களில் நடுவது அவசியம் ஆகும்.

நீர் மேலாண்மை

ஜாதி மல்லி செடிக்கு நீர் பாய்ச்சுவது என்பது முதலில் செடியை நடும் போது ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை ஜாதிமல்லி செடிகளுக்கு நீர் பாய்ச்சினால் போதுமானது.

ஊட்டச்சத்து மேலாண்மை

ஜாதிமல்லி செடி சாகுபடி செய்வதற்கு, செடி ஒன்றுக்கு கீழ்க்கண்ட உரங்கள் தேவைப்படுகின்றன.

10 கிலோ தொழு உரம்

60 கிராம் தழைச்சத்து

120 மணிச்சத்து

120 கிராம் சாம்பல் சத்து

இவற்றை எல்லாம் தரக்கூடிய இரசாயன உரங்களை ஆண்டிற்கு இருமுறையாகப் பிரித்து இட வேண்டும்.

அதன் படி, டிசம்பர் மாதம் காவந்து செய்த பின், ஒரு முறை உரம் இடலாம். அதன் பின், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒரு முறையும் என இரண்டாகப் பிரித்து ஜாதிமல்லி செடிக்கு உரம் இடலாம்.

மேலே கூறப்பட்ட உரங்களைத் தவிர, இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26-ஐ 470 கிராமும், யூரியா 30 கிராமும் இட வேண்டும். குறிப்பாக, இது செடி ஒன்றிற்கு இட வேண்டிய உரங்களின் அளவு ஆகும்.

கவாத்து செய்தல்

செடிகளைப் படரவிடாமல் குத்துச் செடிகளாக வளர்க்க வேண்டும். மேலும், இந்த செடியைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை அதாவது டிசம்பரில் கடைசி வாரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

அதன் படி, புதிதாக செடி நடவு செய்த பின்னர், ஓராண்டு கழித்தே முதல் முறையாக கவாத்து செய்தல் வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Jathi Malli Plant at Home in Tamil | How to Grow Jathi Malli in Tamil | How to Grow Jathi Malli Plant | How to Grow Jathi Malli Plant in Tamil | How to Grow Malli Plant | How to Grow mogra Plant from Stem | How to Grow Malli Leaves | Jathi Malli Plant Care | Jathi Malli Plant in Tamil | Jathi Malli Plant in Pot | Jathi Plant Price


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்