Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க வீட்டிலும் வண்ணமயமான செவ்வந்தி பூக்கள்… … எப்படி வளர்க்கலாம்னு பாருங்க…!

Gowthami Subramani September 01, 2022 & 19:10 [IST]
உங்க வீட்டிலும் வண்ணமயமான செவ்வந்தி பூக்கள்… … எப்படி வளர்க்கலாம்னு பாருங்க…!Representative Image.

வீட்டிலேயே எளிமையாக வண்ண மயமான செவ்வந்தி செடியை வளர்க்கலாம். சிலர் செவ்வந்தி பூக்களைப் பொதுவாக அலங்காரத்திற்காக வீட்டில் வளர்த்துவர். இவற்றைப் பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளவும், கடவுளுக்கு மாலையாகக் கோர்த்துப் போடவும் இந்த செவ்வந்தி பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ணமயமான செவ்வந்தி பூக்கள்

செவ்வந்தி பூக்கள் வண்ணமயமான கலர்களில் கிடைக்கின்றன. அந்த வகையில் வீட்டில் செவ்வந்தி செடி வளர்த்துபவர்கள் எந்த நிற செவ்வந்தி செடி வேண்டுமோ, அந்த நிறத்தில் செடிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடுத்துக் கொண்ட செடியின் மேலிருந்து 10 சென்டிமீட்டரிலிருந்து 15 சென்டிமீட்டர் வரையிலான மேற்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதிலிருந்து புதிதாக செடியை நாம் வளர்க்கலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்ட அளவிலிருந்து எடுத்துக் கொண்ட செடியின் கீழ்ப்புறத்தில் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். இலையின் மேற்புறத்தில் மட்டும் இலைகளை வைத்து, கீழே சிறிது காம்பு இருப்பது போல வைத்துக் கொள்ள வேண்டும்.

செடியின் வேர் வளர்வதற்கு

அதன் படி, மேல் பகுதியில் சுமார் 4-லிருந்து 5 இலைகள் வரை இருக்கும் அளவிற்கு கீழ் பகுதியில் உள்ள இலைகளை நீக்க வேண்டும். அதன் பிறகு, கீழ்ப்பகுதியின் தண்டை, கத்தி கொண்டு சிறிதளவு செங்குத்தாக வெட்ட வேண்டும். இவ்வாறு செங்குத்தான வெட்டினால் மட்டுமே செடிக்கான வேர் உண்டாகும்.

வேர் வளர்வதற்கான ஊடகம்

எந்தவொரு செடியிலும் வேர்களை வளர்ப்பதற்கு ஊடகம் தேவைப்படுகிறது. அந்த வகையில், செவ்வந்தி செடிகளை வளர்க்க மணல் 20%, உரம் 20% மற்றும் தென்னை நார் கழிவு 20%-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், வேர் உருவாவதற்காக, கற்றாழையின் ஜெல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கற்றாழையின் ஜெல்லில் உள்ள சாலிசிலிக் அமிலம் வேர் வளர்வதைத் தூண்டுவதால், தண்டை ஜெல்லில் நனைத்து அதனை மண்ணில் ஊன்ற வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொள்ளும் மண்ணை ஒரு சிறிய டப்பா அல்லது கண்ணாடி போல பிரதிபலிக்கும் தேக்கியை எடுத்துக் கொண்டு அதில் மண்ணைப் போட்டு வைக்க வேண்டும்.

சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம்

எந்தவொரு செடியைப் பொருத்த வரை மிக அதிக அளவு தண்ணீர் இருக்கும் இடமாக இருக்கக் கூடாது. அதே போல, ஈரப்பதம் இல்லாமலும் இருக்கக் கூடாது.

மேலும், 50% சூரியஒளி கிடைக்கப் பெறும் இடத்தில் வைக்க வேண்டும்.

இந்த அளவுகோலில் சரியான இடத்தில் வைக்கும் போது, விரைவாக வேர் விட தொடங்கி விடும்.

அதன் பிறகு, வேர் வருவதை மண் வைத்திருக்கும் பாட்டில் அல்லது கண்ணாடியிலே காணமுடியும்.

இதனை வெளியே எடுத்து, மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும்.

இவ்வாறு எளிதான முறையில் நாமே மண்ணில் நடவு செய்து செவ்வந்தி செடி நன்றாக வளர்வதைக் காணலாம்.

குறிப்பு: வேர்களை மண்ணில் நடுவதற்கு காலை அல்லது மாலை வேளையில் நட வேண்டும். சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரம் மண்ணில் நடவு செய்தால், இளம் வேர்கள் சூரிய ஒளியைத் தாங்காது. அதே போல, மண்ணில் நடவு செய்யும் போது நீர் அதிகமாக இருக்குமாறு வைக்கக் கூடாது. மிதமான ஈரப்பதம் உள்ள மண்ணில் நடவு செய்தால், செவ்வந்தி செடி நன்றாக வளர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது. பூக்கள் அதிகமாக முளைப்பதற்கு, மண்ணில் நடவு செய்வதற்கு முன் தொழு உரம் அதிகமாகப் போட வேண்டும்.

இந்த முறைகளில் வளர்க்கும் போது செடிகள் நன்றாக வளர்வதைக் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Sevanthi Flower | How to Grow Shevanti Plant from Flower | Sevanthi Flower in English | Seventy Flower Plant | Shevanti Flower Seeds | Shevanti Plant care | How to Grow Chrysanthemums at Home | How to Grow Chrysanthemum from Cuttings | How to Grow Sevanthi Flower in Tamil | How to Grow Flower Plants Faster | How to Grow Flower Seedlings | How to Get Flowers to Grow | How to Grow gerbera Plant from Flower | How to Grow Shevanti Plant from Flower | How to Grow lily Flower at Home | How to Get Seeds from lily Flower | Shevanti Plant not Growing | Shevanti Seeds | Seventy Flower Plant | Shevanti Flower Plant care | Shevanti Flower season | Shevanti Flower uses | How to Grow Plant from Flower stem | How to Grow lily Flower at Home | How to Grow pudina Plant from stem | How to Plant Flowers from nursery | How to Get house Plants to Flower


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்