Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?

Gowthami Subramani October 06, 2022 & 20:00 [IST]
ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image.

பொதுவாக, பழங்களின் உட்பகுதியில் விதைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழத்தில் விதைகள் வெளிப்புறத்தில் காணப்படும். இந்த விதைகளின் மூலம், ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கும் முறைகளைப் பற்றி இதில் காண்போம்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

ஸ்ட்ராபெர்ரி விதைகளிலிருந்து ஸ்ட்ராபெர்ரி செடி வளர்க்கும் முறை

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விதைகளிலிருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை வளர்க்கலாம்.

முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து அதிலிருந்து விதைகளை தனியே எடுத்துக் கொள்ளலாம். பழத்தை தண்ணீரில் அலசி விதைகளை எளிதாகத் தனியே பிரிக்கலாம்.

இந்த விதைகள் தண்ணீரிலிருந்து தனியே பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

பிறகு, இந்த தண்ணீரில் ஊறிப்போன விதைகளை டிஸ்யூ பேப்பரில் எடுத்துக் கொண்டு, விதைகளிலிருந்து தண்ணீரை முற்றிலும் அகற்றியவாறு எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, நன்கு முதிர்ச்சியடைந்த பழத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் படி, கருப்பு நிறத்தில் உள்ள செடிகளின் பழங்கள் மட்டுமே செடிகளாக வளரும். இதனால் சற்று முதிர்ச்சியடைந்த பழத்தில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

இதற்கான மண்கலவைக்கு, மண் அல்லது கோகோபீட்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இது விரைவான வளர்ச்சிக்கு உதவும்.

இந்த மண்கலவையில் அந்த விதைகளை தூவி விட்டுக் கொள்ளலாம். சாதாரண மண்ணில் விதைகள் நன்றாக வராது. இதனால், மண்கலவையான மண் அல்லது கோகோபீட்டை உபயோகித்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

பிறகு, மண்கலவையின் மீது சிறிதளவு நீர் தெளிக்க வேண்டும்.

பின், ஸ்ட்ராபெர்ரி பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி, விதைகள் தூவப்பட்ட மண்கலவையில் வைத்துக் கொள்ளலாம். இதன் மீது மீண்டும் சிறிதளவு நீர் தெளித்து விட வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்புக்கு முக்கியமானவை

ஸ்ட்ராபெர்ரி செடி வளர்ப்புக்கு கீழ்க்கண்ட முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. இவற்றின் மூலம் செழிப்பான ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்

தினமும் கட்டாயம் மூன்று முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். மண் ஈரப்பதத்திலேயே இருக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

15 முதல் 30 நாள்களிலேயே இந்த ஸ்ட்ராபெர்ரி செடி முளைத்து வரும். நாம் உபயோகப்படுத்தும் மண் கலவை மற்றும் விதைகளைப் பொறுத்து, செடி வளர்வதற்கான நேரமும் மாறுபடும்.

விதைகள் சிறியதாக இருப்பதால், தண்ணீரை அப்படியே ஊற்றாமல், தெளித்து விட வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி விதைகளின் மூலம் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம்..? எப்படி தெரியுமா..?Representative Image

முதலில், சாதாரண இலைகளாக வளர்ந்து, பிறகு மல்லி தலை போல உருவாகும்.

இவ்வாறு, விதைகளிலிருந்து வருவனவற்றைத் தனியாக எடுத்து ஸ்ட்ராபெர்ரி செடிகளை வளர்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்