Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Grow Strawberry at Home in Tamil: இனி ஸ்ட்ராபெர்ரிய உங்க வீட்டுலயும் வளரவைக்க முடியும்...! இத மட்டும் பண்ணுங்க... எப்படி வளருதுனு பாருங்க....!

Gowthami Subramani June 03, 2022 & 16:35 [IST]
How to Grow Strawberry at Home in Tamil: இனி ஸ்ட்ராபெர்ரிய உங்க வீட்டுலயும் வளரவைக்க முடியும்...! இத மட்டும் பண்ணுங்க... எப்படி வளருதுனு பாருங்க....!Representative Image.

How to Grow Strawberry at Home in Tamil: நாம் இதுவரை, ஸ்ட்ராபெர்ரி பழங்களைத் தரையில் அல்லது தோட்டங்களில் வளர்க்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்ட்ராபெர்ரிகளை தொங்கும் கூடையிலும் வளர்க்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பழத்தை நால் சில வாரங்களுக்குள்ளேயே புதிய பழங்களைத் தரக்கூடியதாக வளரும். இந்த ஸ்வீட்டான ஸ்ட்ராபெர்ரி பழத்தை எவ்வாறு நம் தோட்டத்தில் செழிக்க வைக்கலாம் மற்றும் அதற்குத் தேவையானவை என்ன? போன்றவற்றை இந்தப் பதிவில் காணலாம் (How to Grow Strawberry at Home in Tamil).

ஸ்ட்ராபெர்ரி தோட்டம் செழிக்க

ஸ்ட்ராபெர்ரி பழம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்காது. ஆனால், ஒரு சில பேருக்கு இந்தப் பழத்தைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருக்கும். இந்தப் பழத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பினும், இதனைச் சாப்பிடாதவர்கள் குறைவாகவே இருப்பர். இதனை நம் வீட்டிலேயே சுவையாக வளர்க்கலாம். இதனை உருவாக்க சில விஷயங்கள் தெரிந்திருப்பது அவசியம் . அதனைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போம்.

A picture containing plant, garden, fresh

Description automatically generated

நாம் தேர்ந்தெடுக்கும் கொள்கலனில் வடிகால் துளைகள் இருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், ஈரமான மற்றும் மிருதுவான பாதங்களில் ஸ்ட்ராபெரிகள் வெறுக்கக் கூடியவையாக இருக்கும். இதனால், மண் தண்ணீரில் தொங்கும் போது ஸ் ட்ராபெர்ரிகளின் வேர்கள் அழுகி விடும் (How to Grow Strawberry Plants).

ஸ்ட்ராபெர்ரிகளை அவை வளரும் பருவ காலம் முழுவதுமே அறுவடை செய்ய முடியும். இதனை எளிதான வழிமுறைகளின் மூலம், நம் வீட்டிலேயே வளர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி செடிகளுக்கு உகந்த நேரம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஆகும்.

உயர்ந்த மண்

நாம் வளர்க்கும் எந்த ஒரு பழமோ, காய்கறிகளோ நமக்கு நல்ல மண்ணில் வைப்பது அவசியம். அந்த வகையில், இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை வளர்ப்பதற்கு உரமிட்ட பட்டை மண் வேண்டும். இந்த நல்ல தரமான மண் பசுமை இல்லங்கள் அல்லது தோட்ட மையங்களில் கிடைக்கும் (How To Cultivate Flavourful Strawberries In Planters And Hanging Baskets?).

A basket of strawberries

Description automatically generated with medium confidence

செடியின் அளவு

ஸ்ட்ராபெர்ரி வேர்கள் ஆழமற்ற அமைப்புகளைக் கொண்டிருக்கும். இதனால் இவற்றை செழிக்க வைக்க ஆழமான தொட்டி தேவைப்படாது. குறிப்பிட்ட அளவு அதாவது 20 செ.மீ (8’) ஆழத்தைக் கொண்ட கொள்கலன் போதுமானதாகும் (How to Grow Strawberries at Home?).

ஸ்ட்ராபெர்ரியின் அகலம் நாம் எத்தனை ஸ்ட்ராபெர்ரி செடிகளை ஒன்றாக இணைக்கிறோமோ அதைப் பொறுத்து அமையக் கூடியதாக இருக்கும். அதன் படி, 30 செமீ விட்டத்தைக் கொண்டுள்ள ஒரு தொட்டியில், சுமார் 3 முதல் 4 ஸ்ட்ராபெர்ரி செடிகளை எளிதாகப் பொறுத்த முடியும். அது மட்டுமல்லாமல், ஸ்ட்ராபெர்ரி செடி தாராளமாக வளர போதுமான பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும்.

A basket of strawberries

Description automatically generated with medium confidence

இதன் படி, அதிக அளவிலான ஸ்ட்ராபெர்ரிகளுக்கு பானையின் அளவும் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு பானையின் அளவு மற்றும் அகலத்தை அதிகரிக்கும் போது, அவற்றின் ஆழமும் அதிகரிக்கும்.

கூடை ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரிகள் எல்லாப் பருவத்தையும் தாங்கக் கூடியது. பகல் நேரங்களில் நடுநிலைக் காலத்தில் ஸ்ட்ராபெர்ரிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். வழக்கமாக, இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் ஸ்ட்ராபெர்ரிகளை அறுவடை செய்யலாம். அதே போல, கோடை காலத்தின் தொடக்கத்தில் ஒரு முறை ஸ்ட்ராபெர்ரிகளை அறுவடை செய்யலாம்.

தற்போது, இவற்றை வளர்ப்பதற்குத் தேவையானவற்றையும், எவ்வாறு வளர்ப்பது பற்றியும் காண்போம் (How to Grow Strawberry Plant).

ஸ்ட்ராபெர்ரி வளர்க்கத் தேவையானவை

வடிகால் துளைகள் உள்ள கொள்கலன்

ஸ்ட்ராபெர்ரி செடிகள்

கரி இல்லாத உரம்

A picture containing flower, plant, bouquet, fresh

Description automatically generated

ஸ்ட்ராபெர்ரி செடி வளர்க்கும் முறை

படி 1: நாம் முதலில் ஸ்ட்ராபெர்ரி செடி வைப்பதற்கு முன், கொள்கலனில் வடிகால் துளைகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான ஒன்று ஏனெனில், மேலே கூறப்பட்டுள்ளவாறு ஸ்ட்ராபெர்ரிகள், ஈரமான பாதங்களை வெறுக்கின்றன. இதனால், அதன் வேர்கள் தண்ணீரில் இருந்தால் அழுகிவிடும் (How to Grow Strawberries in Pots).

படி 2: ஸ்ட்ராபெர்ரிகளுக்கு நன்றாக நீர் தேங்கக் கூடிய மற்றும் நல்ல வடிகால் திறன் கொண்ட உயர்தர மண் தேவைப்படுகிறது. நல்ல மண்ணில் காற்று இடைவெளிகள் இருக்கும். இதன் மூலம், அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியும். அதன் படி, உரமிட்ட பட்டை மண் இதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

படி 3: ஸ்ட்ராபெர்ரிகளை நடுவதற்கான தொங்கும் கூடை 30 செமீ  குறுக்கே மற்றும் 20-30 செமீ ஆழத்தில் இருப்பது நல்லது. இந்த அளவில் ஸ்ட்ராபெர்ரி செடிகள் வளர்க்கப்பட்டால், வடிகால் நன்றாகப் பராமரிக்கப்படும் (How to Grow Strawberry Plant in Tamil).

படி 4: இவ்வாறு தொங்கும் கலனில் ஸ்ட்ராபெர்ரிகளிய வளரவிடும் போது, எந்த காலத்திலும் அதன் அறுவடையைப் பெற முடியும். இருந்தபோதிலும், மற்ற மாதங்களை விட ஜூன் மாதத்தில் வளரக் கூடிய பெர்ரி சிறியதாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்