Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Take Care of Terrace Plants at Home: மாடித்தோட்டம் வைத்திருக்கிறீர்களா..! அப்போ இப்படி பண்ணுங்க…. செடி பரவலா சூப்பரா வளரும்…!

Gowthami Subramani July 15, 2022 & 19:45 [IST]
How to Take Care of Terrace Plants at Home: மாடித்தோட்டம் வைத்திருக்கிறீர்களா..! அப்போ இப்படி பண்ணுங்க…. செடி பரவலா சூப்பரா வளரும்…!Representative Image.

How to Take Care of Terrace Plants at Home: மாடித் தோட்டத்தில் செடி வளர்க்கும் சில பேர் அதை பராமரிக்கத் தெரியாமல் செடிகள் வளராமல் பாதியிலேயே நின்று விடுகிறது. இதனைத் தடுக்க கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

வீட்டுத் தோட்டத்தில் செடிகளை நல்ல முறையில் வளர்த்துவதற்கு கீழ்க்காணும் பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

செடி நன்றாக வளர்ப்பதற்கு மற்றொரு முக்கியமானது உரம் வைத்தல் ஆகும். மேலும், இலைகளை வெட்டி விடுதல், தேமோர் கரைசல் இடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதில் உள்ள சில வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஆரம்பத்தில் உரம், மண் கலவை அனைத்தையும் கலந்து விதை போட்டிருப்போம். அதே போல, இதில் சில வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக நல்லது. செடி வளர ஆரம்பித்ததும், அதன் சில இலைகள் துளிர்த்திருக்கும். இந்த காலத்தில், அந்த இலைகளை வெட்டி விட வேண்டும். அதாவது ட்ரிம் செய்ய வேண்டும். இதன் மூலம், கிளைகள் அதிகமாவதுடன் செடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
  • அதன் பின், செடிகள் வளர்ந்து காய்கறிகள் தரக்கூடிய காலத்தில் மாட்டுச்சாணம் அல்லது வெர்மிகம் போஸ்ட்-ஐ இட வேண்டும்.
  • காய்கறிகள் வளரக்கூடிய செடிகளில் காய் வைப்பதற்கு முபே பூக்கள் உதிர்ந்து விடும். இது பெரும்பாலானோரின் மாடித் தோட்டத்தில் நடக்கும். இதைத் தவிர்க்க தேமோர் கரைசலை நீரில் கரைத்து செடிகளின் மீது ஸ்பிரே செய்து விட வேண்டும்.
  • பிறகு செடியில் எந்த வித பிரச்சனையும் இல்லை எனும் போதிலும், 15 நாள்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய் தெளிப்பது நல்லது. நன்றாக வளர்ந்த செடிகளுக்கு 5மி.லி வேப்ப எண்ணெய் உடன் சிறிதளவு திரவ சோப்பை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பூச்சித் தொல்லைகள் இருக்காது.
  • மாவுப்பூச்சி தொந்தரவு செம்பருத்திச் செடிகளில் இருக்கும். இதனை நீக்க குளிர்ந்த நீரைக் கொண்டு ஸ்பிரே செய்ய வேண்டும். ஏனெனில், குளிர்ந்த நீரைக் கொண்டு மாவுப்பூச்சினை அழிக்க முடியும். தண்ணீரை அடிப்பது மட்டுமல்லாமல், செடிகளில் இருக்கும் மாவுப்பூச்சினை பழைய டூத் பிரஷைக் கொண்டு தேய்த்து விட்டு நீக்கலாம். இதுவே பூச்சிகள் அதிகமாக இருப்பின், அதன் இலைகளை வெட்டி விட்டு மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, மாவுப்பூச்சிகளை முற்றிலும் குறைக்கலாம்.
  • மேலும், செடி இருக்கும் இடம் சூரியன் அதிகம் படாதவாறும், சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்கும் இடத்திலும் இருக்க வேண்டும். வேப்ப எண்ணெய், குளிர்ந்த நீர் மற்றும் இன்னும் சிலவற்றைப் பயன்படுத்தி, செடியைப் பசுமையாக வளர்க்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Take Care of Plants at Home | Taking Care of Indoor Plants in Home | How to Take Care of Plants Outdoor | How to Take Care of Plants Indoors | How to Take Care of Plants Essay | How to Take Care of Plants and Trees | How to Take Care of Plants at Home | How to Take Care of Plants in Winter | How to Take Care of Plants in Pots | How to Take Care of Plants When Away | How to Take Care of Plants in Summer | Ways on How to Take Care of Plants | 5 Ways on How to Take Care of Plants


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்