Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

Guru Peyarchi 2022 Magaram in Tamil: அனுசரணையான பலன் தரும் 2022 குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு நன்மையா!

Manoj Krishnamoorthi April 07, 2022 & 05:30 [IST]
Guru Peyarchi 2022 Magaram in Tamil: அனுசரணையான பலன் தரும் 2022 குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு நன்மையா!Representative Image.

பொறுமையான குணத்தாலும் அன்பான சுபாவத்தாலும் எளிதில் எதிரிகளையும் நண்பராக்கும் உங்களுக்கு இந்த வருட குருப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

 

மகர ராசி குருப்பெயர்ச்சி நிலை

ஏப்ரல் 14ஆம் நாள் முதல் உங்கள் ராசியில் குரு பகவான் 2ம் வீட்டிலிருந்து 3ஆம் வீட்டில் அமர்ந்து பலவித மாற்றங்களை நிகழ்த்தப் போகிறார்.  3ம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் தன் சொந்த வீட்டில் அமர்வது நன்மையை அளிக்கும்,  அந்த வகையில்  அயல்நாடு செல்லும் வாய்ப்பைத் தரும். இந்த மாற்ற நிலை உங்கள் வாழ்க்கை பற்றிய புரிதலை உணர்த்தும் தருணமாகும்.

பொதுபலன் (Guru Peyarchi 2022 Magaram in Tamil)

கடினமான உழைப்பத்தர தயங்காத மகர ராசி வாசகரே உங்கள் ராசியில் 14.04.2022 முதல் 22.04.2023 வரை உள்ள குருப்பெயர்ச்சியில் குரு பகவான் 3ம் இடத்தில் அமர்ந்திருப்பது தன ஸ்தானத்தை உயர்த்தும்.தொழில் செய்வோர்களின் செல்வ நிலை இந்த குருப் பெயர்ச்சியில் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும் ஆனால் அயராது உழைத்தால் நிச்சியமாக முன்னேற்றம் இருக்கும். மகர ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சிக்குக் கலவையான பலன் அளித்தாலும் குரு தன் சொந்த இடத்தில் இருப்பது மகர ராசிக்குச் சாதகமாகும். 

உங்கள் ராசியின் அதிபதியான சனிபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் மாதம் வருவதால்  செல்வ நிலையை உயர்த்துவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி அடையச் செய்வார். 

திருமண வாழ்க்கை இயல்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் அதில் சிறு கருத்து வேறுபாடு உருவாகினாலும், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கலந்து உரையாடுவது சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். கல்வி நிலை இயல்பாக உள்ளது, போட்டித் தேர்வு எழுதுபவர்கள் வெற்றி கிடைக்கும் வரை போராடுவது வெற்றி அளிக்கும். நிதி நிலையைப் பொருத்தவரை செல்வச் செழிப்பாக இருப்பீர்கள். தொழில் நிலை மிகவும் நன்றாக உள்ளது கௌரவ பதவி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒருவித சாதகமான நிலை என்று கூறலாம்.

Guru Peyarchi 2022 Kanni Rasi: குருப்பெயர்ச்சியில் பலவித மாற்றங்களை எதிர்கொள்ளும் கன்னி இராசி!

பரிகாரம்    

குரு பார்வையில் நன்மைகள் பெறச் சனிக்கிழமை அன்று அதிகாலையில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு நீரினால் வாரம் ஒருமுறை அபிஷேகம் செய்ய வேண்டும்.  சனிக்கிழமை அன்று பருப்பு போன்ற தானியங்களை தானம் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட கல்: நீலக்கல்

 Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்