Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,316.88
373.20sensex(0.51%)
நிஃப்டி22,276.85
128.95sensex(0.58%)
USD
81.57
Exclusive

Weekly Astrology in Tamil: கவனமாக இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் இதுவா! இந்த வார ராசிபலன்...! ஜூன் 5 - 11 வார ராசிபலன்…!

Manoj Krishnamoorthi June 04, 2022 & 21:15 [IST]
Weekly Astrology in Tamil: கவனமாக இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் இதுவா! இந்த வார ராசிபலன்...! ஜூன் 5 - 11 வார ராசிபலன்…!Representative Image.

சுபகிருது வைகாசி மாதத்தில் இந்த வாரத்தின் (ஜூன் 5 - 11) வார ராசிபலனில் (Weekly  Astrology in Tamil) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதையும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதையும் காண்போம்.


மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை அடுத்த 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் எதிர்பார்க்காத மருத்துவ செலவு குடும்பத்தில் உருவாகும், செல்வ நிலை அமோகமாக உள்ளது, திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் உங்கள்  வியாழன் 6ம் வீட்டிலும் செவ்வாய 2 ஆம் வீட்டிலும் இருப்பது தொழில் ஸ்தானத்தை சிறப்பாக உயர்த்தும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது நிதானமாக இருங்கள். வீட்டில் நட்புறவாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு யோகமான வாரமாக இருக்கும். இரக்க குணம் அதிகமாக இருக்கும், பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். எதிர்பார்த்த முக்கியமான செய்திகள் வரும்.  ஏற்றம்!

சித்திரை: கல்வியில் முன்னேற்றம்

சுவாதி: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

விசாகம்: வாழ்வு மேன்மை அடையும்  

வழிபட வேண்டிய தெய்வம்: கால பைரவர் வழிபாடு

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தினத்தில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற ஆடைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

விருச்சிகம்

பொது பலன்: கலகலப்பான சுபாவம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தொழிலில் அதீத நன்மைகள் இருக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவி  கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். மன நிலை தெளிவாக இருக்கும், திருமண வாழ்க்கை மிகவும் அன்யோன்யமாக இருக்கும். பொருளாதாரம் ஏற்றம் இருக்கும். சொத்துகள் வாங்கும் வாய்ப்பு இருக்கும். திருமண பாக்கியம்  உண்டாகும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. உணவு பழக்கத்தைச் சீர் செய்தால் உடல்நலம் உயரும். கல்வி நிலை நல்ல முன்னேற்றம் அடையும், பாராட்டப்படுவீர்கள். மதிப்பு!

விசாகம்: செல்வ் நிலை நன்றாக உள்ளது.

கேட்டை: தொழில் வளர்ச்சி

அனுஷம்: சுப நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: சனிக்கிழமை அன்று ஸ்ரீராமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை அளிக்கும்.

தனுசு

பொது பலன்:  உங்கள் உறுதியான குணத்துக்கு தேவையான வெற்றியை இந்த வாரம் பெறுவீர்கள், ஆனால் வாரத்தின் முதற்பாதி சில எதிர்மறை விளைவுகளைத் தரும். . அலுவலகத்தில் சக பணியாளரின் உதவி மிகப்பெரிய சகாயமாக இருக்கும், நட்பு கிடைக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும், குடும்ப செலவு இருக்கும்.  நண்பர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். ஆரோக்கியக் குறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். நலம்!   

மூல நட்சத்திரம்: பண வரவு இருக்கும், குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.

பூராடம்: சுகமான உடல்நலம் கிடைக்கும்.

உத்திராடம்: சுப செலவு, தொழிலில் அமோக வளர்ச்சி இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  ஆஞ்சநேயர்

பரிகாரம்: அனுமனுக்கு நெய் உருண்டை செய்து அனுமனுக்கு படைத்து, அதை தானம் செய்வது வாழ்வை மேம்படுத்தும்.

மகரம்

பொது பலன்:  உங்கள்  கலகலப்பான சுபாவத்தால்  மற்றவர்களை ஈர்க்கும் உங்களுக்கு இந்த வாரம் உடல் சோர்வாக இருக்கும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், நல்ல ஓய்வு உடல்நலத்தை மேம்படுத்த உதவும். இரத்த உறவின் மூலம் சில ஆதாயம் கிடைக்கும்.  பண வரவு இருக்கும். நற்பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் சில சாதகமில்லாத செயல்கள் நடைபெறும், தன்னம்பிக்கை தேவைப்படும். வேலை தேடும் மகர ராசிக்காரருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும், சில நபரின் பேச்சு குடும்பத்தின் மன நிம்மதியைக் கெடுக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். நம்பிக்கை!

உத்திராடம்: மாணவர்களுக்கு கல்வி நிலை அமோகமாக உள்ளது.

திருவோணம்: நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி உறுதி

அவிட்டம்:  வியாபார பயணம் இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சனிபகவனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நீல நிற ஆடை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். 

கும்பம்

பொது பலன்: உங்கள் சாதுரியமான மனநிலை இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல லாபமளிக்கும், வேலைச்சுமை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். மனம் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உங்கள் செல்வ நிலையை உயர்த்தும். இந்த வாரம் புதிய நபர்கள் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சில மன வருத்தங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், வெளியூர் சென்று படிக்கும் யோகம் உருவாகும். புதிய வண்டி வாகனம் போன்ற புதிய விசயங்கள் வாங்கும் யோகம் உள்ளது. நன்மை!

சதயம்: இலக்கை அடைய அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

அவிட்டம்: எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்

பூரட்டாதி: வியாபாரத்தில் இயல்பான வளர்ச்சி இருக்கும், நல்ல லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: தினமும் காலை பொழுதில் சிவனை மனதில் நிறுத்தி தியானம் செய்ய வேண்டும்.

மீனம்

பொது பலன்: ஆசைப்படும் விசயங்கள் கிடைக்கும் வரை போராடலாம் என்ற உறுதியான குணத்தைக் கொண்ட மீன ராசிக்காரரே இந்த வாரம் பண வரவு இருந்தாலும்  செலவு இருந்து கொண்டு தான் இருக்கும்.தொழிலில் உங்கள் முக்கியத்துவம் ஓங்கி இருக்கும், வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகள் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும், ஆன்மீக தலத்துக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும். திருமண வாழ்வில் மனக் கசப்புகள் இருக்கும். மாணவர்களின் கல்வி ஓரளவு நன்றாக இருக்கும். வாரத்தின் இறுதியில் மனம் குழப்பமாக  இருக்கும். போராட்டம்!

பூரட்டாதி: உங்கள் மதிப்பு கூடும்.

உத்திரட்டாதி: பணப்புழக்கம் அதிகமாக இருக்கும், சுப நிகழ்ச்சி நடக்கும்

ரேவதி: ஆசைகள் நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன்

பரிகாரம்: பறவைகளுக்கு ஊணவளிப்பது வாழ்வின் ஐஸ்வரியத்தை அளிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்