Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மகரம் ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Magaram in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மகரம் ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 மகரம்:

இந்த மாதத்தில் சந்திக்கக்கூடிய மனிதர்கள் அனைவருமே நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். சூரியன் மற்றும் புதன் சஞ்சாரம் பெண்களுக்கு யோகத்தை கொடுக்கும். மூத்த பெண்கள் மூலமாக சந்தோஷங்கள் ஏற்படலாம். அவர்களின் அன்பு, அரவணைப்பு, பாசம் கிடைக்கும். தாயார் மூலம் ஆதாயம் உண்டு. நிறைய புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தெய்வ அனுகிரகம் ஏற்படும். சிலருக்கு புதிய நட்பு வட்டாரங்களுடன் பழகக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மேலும், புது நட்பு வட்டாரங்களுடன் புது தொழில் தொடங்கவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவால் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி பாசம் அதிகரிக்கும். இருப்பினும், உங்க சந்தோசத்தை கெடுக்கும் விதமாக சில பிரச்சனைகள் வரலாம் பார்த்து பக்குவமாக நடந்துக் கொள்ளவும். அதேபோல், அடிவயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் மற்றும் வீட்டில் பெரியவர்களின் உடல்நிலைகளில் கவனமாக இருந்தால் போதுமானது மற்றபடி அனைத்தும் அற்புதமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்