அக்டோபர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் செவ்வாய், சிம்ம ராசியில் சுக்கிரன், கன்னி ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் நடக்க உள்ளது. மேலும், அக்டோபர் 18, 19 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் துலாம் ராசிக்கும், அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
புத்திசாலித்தனமாக பணியை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டமிடல் ஏற்படும். வாழ்க்கை பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். நிதானமாக எந்த ஒரு சூழ்நிலையையும் கையாள வேண்டும். சிறிய பிரச்சனைகளை அத்தோடு விட்டுவிடுவது நல்லது. இல்லையெனில், அது உங்களுக்கு பெரிய மனகவலையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் விவாதம் மேற்கொள்ளும் சூழல் அமையலாம். அப்போது பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் சார்ந்து புதிய முயற்சிகள் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது.
தன்னம்பிக்கையுடன் தங்களின் இலக்கை நோக்கி செல்ல வேண்டும். உத்தியோகத்தில் உங்களின் வளர்ச்சிக்கு பல தடைகள் உண்டாகலாம். இருப்பினும், அதனை கடந்து வருவதற்கு வாழ்க்கைத் துணை உறுதுணையாக இருப்பார். கவனத்தை சிதறடிக்க பல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் அவற்றை தாண்டி சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணம் சார்ந்த விஷயங்கள் சாதகமாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த பிராத்தனை நிறைவேறும்.
எதிர்கால படிப்பு சார்ந்த விஷயங்கள் சாதகமாகும். வரவிருக்கும் செலவுகளை சுபச் செலவாக மாற்றிக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். திருமணம் விஷயத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகும் வாய்ப்புள்ளது. வாழ்க்கை பற்றிய சிந்தனையால் புதிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தின் மீது அக்கறை வேண்டும். கடன் பிரச்சனை குறையும். பணவரவு எப்பையும் போல் இருக்கும். வெளியூர் செல்வதை தவிர்ப்பது நல்லது. மெதுவாக வாகன பயணம் மேற்கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…