Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

புரட்டாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 துலாம்:

குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவு பிறக்கும். துணிச்சலுடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்காக காத்துக்கொண்டிருந்தால், அது உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி சாதகமாகும். போட்டித் தேர்வு எழுதி இருந்தால் வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் வெற்றி கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் தென்படும். எதிர்பாராத பணவரவு வந்து சேரும்.

ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

ஒரு பக்கம் லாபம், மறுபக்கம் விரயம் என இரண்டுமே சமமாக இருக்கலாம். முதலீடு சார்ந்த விஷயத்தை சிந்திக்கவே வேண்டாம். வேலை பற்றிய கவலை வேண்டாம், நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் சூழல் அமையும். முடிந்த வரையில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் மேற்கொள்ளலாம். நண்பர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 தனுசு:

என்ன தான் தடை ஏற்பட்டாலும் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். தேவைக்காக மட்டும் கடன் உதவி பெறுங்கள். இருதயம் நோய், பல், கண் பிரச்சனை இருப்பவர்கள் உடல்நிலையில் கவனம் வேண்டும். உடன் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான முயற்சி சாதகமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்