Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

புரட்டாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 மகரம்:

சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக இருக்கவும். வேலை மாற்றம் சாதகமாகும். வழக்கு சார்ந்த விஷயம் இழுபறியாக இருக்கும். முக்கிய தேவை இல்லையெனில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். உடல் உபாதைகள் வந்து போகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி சார்ந்த விஷயத்தில் நினைத்தது நடக்கும்.

தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 கும்பம்:

எடுக்கும் முயற்சியை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளவும். தடை தாமதங்கள் இருந்தாலும் அதனை தாண்டி நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முயற்சிக்கான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். யோசிக்காமல் மற்றவர்களுக்கு ஜாமீன் தந்து விடாதீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் எப்பையும் போல இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 

தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 மீனம்:

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு கைகூடும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். இழுபறியாக இருந்த வழக்கு விஷயம் சாதகமாக முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முழங்கால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும். பல நெருக்கடிகள் தொழிலில் வந்து போகும். தம்பதிகளுக்கு இடையே கருத்து மோதல் உண்டாகலாம். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய தொழில் செய்ய நினைப்பவர்கள் முயற்சிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்