Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை..! | October Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

அக்டோபர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் செவ்வாய், சிம்ம ராசியில் சுக்கிரன், கன்னி ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் நடக்க உள்ளது. மேலும், அக்டோபர் 18, 19 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் துலாம் ராசிக்கும், அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 கடகம்:

குடும்பத்துடன் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும் அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றம் இல்லாவிட்டாலும் தேவையான பணவரவு நன்றாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழப்பங்கள் வந்து நீங்கும். மற்றவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். பணி இடத்தில் அமைதியாக இருப்பது நல்லது. நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் எந்த சஞ்சலமும் இல்லை. தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிப்பதை உணர்வீர்கள். பாசிட்டிவான எண்ணத்துடன் இருந்தால் கூடுதல் சிறப்பு. வாகனத்தில் வேகமாக செல்வதை தவிர்க்கவும்.

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 சிம்மம்:

வாழ்க்கையில் புதிய முயற்சியை மேற்கொள்ள நினைக்கும் சிம்ம ராசியினர், இந்த அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் செய்து முடித்து கொள்ளுங்கள். ஏனெனில், அதற்கு பிறகு சூரியன் பகவான் செவ்வாய் மற்றும் கேதுவுடன் இணைய உள்ளார். எனவே, நினைத்த விஷயங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். இருப்பினும் செய்யும் முயற்சியை மேற்கொண்டே இருங்கள். துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் பொறுமையாக யோசித்து செயல்படுங்கள். உணவு, பழக்கவழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை நினைக்காமல் இருங்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 கன்னி:

என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் செயல்படுவீர்கள். குடும்ப விஷயத்தில் முக்கிய முடிவை எடுக்கும் போது யோசித்து செயல்படுங்கள். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். திருமண விஷயத்தில் பொறுமையாக இருக்கவும். அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதியில், நிபுணர்களின் ஆலோசனை கேட்டு துறை சார்ந்த முடிவுகளை எடுப்பது புத்திசாலித்தனம். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தனிமையுடன் நாட்கள் இருப்பது போல் தோன்றும். காரம், புளிப்பு மற்றும் வறுத்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்