Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும்..! | October Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும்..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

அக்டோபர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் செவ்வாய், சிம்ம ராசியில் சுக்கிரன், கன்னி ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் நடக்க உள்ளது. மேலும், அக்டோபர் 18, 19 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் துலாம் ராசிக்கும், அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும்..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 துலாம்:

குடும்பத்தில் இருப்பவர்கள் மீது ஒரு விதமான எரிச்சல் உணர்வுடன் காணப்படுவீர்கள். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத விவாதங்கள் தோன்றி மறையும். இந்த சூழலில் இருந்து விடுபட, உங்களின் முழு கவனத்தையும் வேலை, தொழில், வியாபாரத்தில் செலுத்தினால் நல்லது. கோபம் மற்றும் மனஉளைச்சல் ஏற்படுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் சற்று சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் சாதகமாகும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் செயல்படவும்.

எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும்..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

விரயங்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். இருக்கும் பிரச்னைக்களை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமணம் சார்ந்த விஷயங்களில் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு கூடிய விரைவில் நற்செய்தி கிடைக்கும். மேலும் அரசு உதவி வேண்டும் என்று இருப்பவர்களுக்கு கட்டாயம் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது. பணவரவு தேவைக்கேற்ப இருக்கும். எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். இருக்கும் பொருளாதார பிரச்சனை நிவர்த்தியாக முயற்சித்தால் பலன் கிடைக்கும்.

எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளாமல் இருக்கவும்..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 தனுசு:

நினைத்தது நடக்கும் மாதமாக அக்டோபர் மாதம் தனுஷ் ராசியினருக்கு அமையும். உத்தியோகம் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும்.  பதவி உயர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் காணப்படுவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்