Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது இந்த ராசியினருக்கு நல்லது..! | October Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது இந்த ராசியினருக்கு நல்லது..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

அக்டோபர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் செவ்வாய், சிம்ம ராசியில் சுக்கிரன், கன்னி ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் நடக்க உள்ளது. மேலும், அக்டோபர் 18, 19 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் துலாம் ராசிக்கும், அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது இந்த ராசியினருக்கு நல்லது..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 மேஷம்:

எந்த விஷயத்திலும் போட்டியுடன் செயல்படும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அக்டோபர் மாதம் மேஷ ராசியினருக்கு ஒரு விதமான பயம் கலந்த உணர்வுடன் காணப்படுவீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில், எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்திக்காமல் முன்னேற்றம் அடைவீர்கள். இறை நம்பிக்கை மீது ஆர்வம் அதிகரிக்கும். தியானம் செய்வதால் உங்களை நீங்களே உணரும் சூழல் அமையும். உங்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது இந்த ராசியினருக்கு நல்லது..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

மனதளவிலும், புத்தியளவிலும் தெளிவுடன் இருப்பீர்கள். சுப விரயங்கள் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையிடத்தில் பணி மீது கவனத்தை செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். சேமிப்பு தொடர்பான எண்ணம் ஈடேற தாமதமாகும். நெருக்கமானவர்களுடன் குழப்பமான சூழ்நிலையில் இருக்க நேரிடும். உத்தியோகத்தில் அலைச்சல் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பது இந்த ராசியினருக்கு நல்லது..! | October Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அக்டோபர் மாத ராசிபலன் 2023 மிதுனம்:

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பல்வேறு சிந்தனைகள் மனதில் தோன்றும். இருப்பினும் நடைமுறைக்கு வரும் போது யோசித்து செயல்படவும். உடல் உபாதைகள் மீது கவனம் வேண்டும். மனதில் எப்போதும் குழப்பமான சிந்தனையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் அமையும். தம்பதிகளுக்கு இடையே விவாதங்களை குறைத்துக்கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்