Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Lovers Problem Pariharam in Tamil: லவ்வர்ஸ்குள் உள்ள பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம், இதை செய்யுது பாருங்க  காதலில் பிரசனையே வராது!

Manoj Krishnamoorthi May 04, 2022 & 17:20 [IST]
Lovers Problem Pariharam in Tamil: லவ்வர்ஸ்குள் உள்ள பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம், இதை செய்யுது பாருங்க  காதலில் பிரசனையே வராது!Representative Image.

மனிதன் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் மற்றவரின் நினைவாக  எப்போதும் இருக்கும் மனநிலையே காதல் ஆகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் நினைத்து சுகதுக்கத்தில் திளைத்திருப்பது தான் காதலின் உன்னதமான பண்பாகும். ஆனால் ஒருசில சமயம் காதலிக்கும் காதலருக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சிறு விரிசல் பெரிய பிரச்சனையாக மாறி பின்னாளில் உறவை முறிக்கும் அளவு உருவெடுத்துவிடும். காதல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கீழ்வரும் பரிகாரங்களின் மூலம் சரி செய்யலாம்.

வசீகர பூஜை என்பது அக்காலத்தில் மன்னர்களும் மிகப்பெரிய செல்வந்தர்களும் பயன்படுத்திய காந்த சக்தியை அதிகப்படுத்தி தன்பால் ஈர்க்கச் செய்த சிறப்பு பூஜை ஆகும். அக்காலத்தில் இது மிகவும் பிரசக்தி பெற்று ஆன்மீக நடைமுறையாகக் கருதப்பட்டது.

1.கிருஷ்ணர்

காதல் பிரச்சனைகள் நிவர்த்தியாகப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வணங்க வேண்டும்,  காதலில் கெட்டிக்காரர் ஆவார்.  கையில் புல்லாங்குழலுடன் தலையில் மயில் இறகுடன் கோபிகள் மனதைக் கவரும் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட மந்திரத்தை 9 நாட்களுக்கு தினமும் உறங்கும் முன் உங்கள் மனம் விரும்புகிறவரை நினைத்து சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வது கவர்ச்சியை அதிகப்படுத்தி உங்கள் அன்பானவரின் மனதில் உங்களைப் பற்றிய வசீகரத்தை உருவாக்கும். 

கிருஷ்ண காயத்திரி மந்திரம்

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, 

வாசுதேவாய தீமஹி,

தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,

கிருஷ்ணப்ரியாயே தீமஹி,

தந்நோ ராதா ப்ரசோதயாத்.

மேலும் படிக்க: காதல் வெற்றி பெற பரிகார பூஜை பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

2. காமதேவன்

'காதல் மற்றும் ஈர்ப்பின்' கடவுளான காமதேவன் வழிபாடு காதலை வளர்க்கும். இந்து சமயத்தின் முறைப்படி  காம தேவன் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் மகன் ஆவார். இன்னும் ஒரு சில கதைகள் காம தேவர் சிவனின் அம்சம் என்றும் கூறுகிறது. காதலின் அடிப்படைத் தேவையான அன்பு குறைதலே பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். காம தேவனின் வழிபாடு அன்பை அதிகரித்து காதல் உறவை மென்மையாக  மாற்றுவார். அதற்கு இந்த காய்த்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

காமதேவன் காயத்திரி மந்திரம்

ஓம் காமதேவாய வித்மஹே, 

புஷ்ப பனாய தீமஹி, 

தன்னோ அனங்கஹ பிரச்சோதயாத். 

3.சுதர்ஷனா மந்திரம்

சுதர்ஷனம் என்ற வார்த்தை சு+ தர்ஷனா என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததாகும்.  'சு' என்றால் மங்களம் என்பது பொருளாகும், 'தர்ஷ்னா' என்பதன் பொருள் பார்வை அகும். ஆதாவது மங்களமான பார்வை என்பதுதான் பொருளாகும். இது விஷ்ணு பகவனின் கையில் இருக்கும் சக்கரமாகும், அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கொண்ட து சுதர்ஷ்ன சக்கரம் ஆகும். காதலில் ஏற்படும் சங்கடங்களை  சுதர்ஷ்ன பூஜை தீர்க்கும்.  

ஓம் சுதர்ஷனாய வித்மஹே 

மஹா ஜ்வாலாய தீமஹே 

தன்னோ சக்ர பிரச்சோதயாத்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்