Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Dhanusu Rasi Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் நன்மையா இல்ல தீமையா! குழப்பமான நிலையில் இருக்கும் தனுசு ராசியின் நிலைமை.....!

Manoj Krishnamoorthi May 27, 2022 & 13:15 [IST]
Dhanusu Rasi Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் நன்மையா இல்ல தீமையா! குழப்பமான நிலையில் இருக்கும் தனுசு ராசியின் நிலைமை.....!Representative Image.

சனி பகவனின் பார்வை மனித வாழ்வின் கர்ம வினைப்பயனை கொடுத்து அவன் வாழ்வை மேம்படுத்த உதவும், 29.04.2022 முதல் 12.07.2022 வரை சனி பகவான் 3வது வீட்டில் இருப்பது, தனுசு ராசிக்கு எதிர்பார்க்காத ஆதாயங்களைத் தரும். இந்த வருடம் 2022 சனி பகவனின் பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு (Dhanusu Rasi Sani Peyarchi 2022) கிடைக்கப் போகும் பலன் பற்றி அறிய இவ்வாசகத்தைப் பின்தொடரவும்.       

தனுசு ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் (Dhanusu Rasi Sani Peyarchi 2022)

பொது பலன்

கலை ஆர்வம் அதிகம் கொண்ட உங்களுக்கு 2022 சனி பெயர்ச்சி நிம்மதியான வாழ்வை அளிக்கும், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். 29.04.2022 முதல் சனி பகவான் 3வது வீட்டில் இருப்பது அனுகூலமாகும், அதன்பிறகு 12.07.2022 முதல் 2வது வீட்டில் சனி பகவான் மாறுவது நிலுவை பிரச்சனைகளைக் குறைக்கும். கடின உழைப்பால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

குடும்ப வாழ்க்கை

சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் சிறு சிறு மோதல் வரும், அதனால் குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும், வெளிப்படையான பேச்சு உறவில் நல்ல புரிதலை அமைக்கும். திருமண வாழ்க்கை இயல்பாக இருக்கும். மொத்தத்தில் பொறுமையாக இருந்தால் உறவில் பிரச்சனையில்லாமல் வாழ முடியும். 

தொழில்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரம் இந்த வருட சனி பெயர்ச்சியால் உங்களுக்கு கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையிலிருந்த செயல்களை விரைவாக முடிப்பீர்கள். 2வது வீட்டில் சனி பகவான் இருப்பது, எதிர்பார்த்த வெற்றியை மெதுவாக அளிக்கும். உங்கள் சக பணியாளரிடம் நல்ல உறவு இருக்கும். தொழிலில் இடமாற்றம் நிகழும். சில தனுசு ராசிக்காரருக்கு சேமிப்பு இருக்கும், சிலருக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும், சிலருக்கு கிடைக்கும் உதவி செல்வ நிலையை சமமாக்கும்.   

கல்வி

மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், 2022 சனி பெயர்ச்சி காலம் உங்களுக்கு வெளியூர் சென்று கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கும், போட்டி தேர்வில் வெற்றி கொள்ளும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.

உடல்நலம்

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, ஆனால் குடும்பத்தில் இருக்கும் மருத்துவ செலவு குறையாது. குடும்பத்தின் ஆரோக்கியத்தின் மீது ஆதீத் கவனம் செலுத்த வேண்டும். இருதயப் பிரச்சனைகளால் சிரமப்பட்ட உங்களுக்கு சனி பகவானின் அருளால் படிப்படியாகப் பிரச்சனைகள் தீரும். 

பரிகாரம்

  • வாரந்தோறும் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
  • சனிக்கிழமை தினங்களில் சனி பகவனுக்கு எள்ளு படைத்து பூஜை செய்ய வேண்டும். 
  • தினமும் காகத்துக்கு உணவளித்த பிறகு காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: மீன  ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற பரிகார செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்